மீண்டும் IPL கோப்பை தோல்வி.. ரோஹித்துக்கு பறந்த மெசேஜ் .. விலகி செல்ல தயாராகும் கோலி BCCI ஆட்டம் ஆரம்பம்..!

First Published Nov 9, 2020, 3:17 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணியில் ரோஹித் சர்மா எப்போது வேண்டுமானாலும் இணைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

காயம் காரணமாக ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இவரின் கீழ் தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அணியில் இவர் எடுக்கப்படவில்லை. ஆனால் மும்பை அணியின் கடைசி போட்டியில் இறங்கிய இவர்.. தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபித்தார்
undefined
எனக்கு காயம் பெரிதாக இல்லை. நான் முழு பிட்னசுடன் இருக்கிறேன் என்பதை பிசிசிஐ அமைப்பிற்கு நிரூபிக்கவே ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். பிசிசிஐ அமைப்பிற்கு ரோஹித் அனுப்பிய மெசேஜ் போல இதை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். இதனால் ரோஹித் சர்மா பிட்னஸ் குறித்து ஆலோசனை செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது
undefined
அவரை இந்திய அணியில் எடுப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறாத நிலையில்.. தற்போது கோலியும் சில போட்டிகளில் ஆட முடியாது. அவருக்கும் அனுஸ்கா சர்மாவிற்கும் அடுத்த மாதம் இறுதியில் குழந்தை பிறக்க உள்ளது. இதனால் கோலி டெஸ்ட் தொடரின் பாதியில் வெளியேற வாய்ப்புள்ளது. இந்த தொடருக்கு ராகுலை கேப்டனாக நியமிக்க முடியாது.
undefined
ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிக்கு எதிராக ராகுலை கேப்டனாக அனுப்ப முடியாது. இதனால் ரோஹித் சர்மாவை அழைக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. அதாவது ரோஹித்தை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து டெஸ்ட் தொடரின் கேப்டனாக நியமிக்கலாம் என்று பிசிசிஐ கருதுகிறது. இதை கங்குலியும் கூட சூசகமாக தெரிவித்து இருந்தார்
undefined
சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த கங்குலி.. ரோஹித் பிட்டாக இருந்தால் கண்டிப்பாக அணியில் எடுப்போம் , அதில் சந்தேகம் இல்லை என்றார். இது ரோஹித்திற்கு அனுப்பப்பட்ட வெளிப்படையான மெசேஜ் என்கிறார்கள்.
undefined
click me!