
Athiya Shetty Pregnant Photoshoot Pictures : அதியா ஷெட்டியின் போட்டோஷூட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல். கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்துள்ளார். தற்போது இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வரும் கேஎல் ராகுல் சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் ஒரு வீரராக அங்கம் வகித்தார். அவர் 5 போட்டிகளில் 4 இன்னிங்ஸ் விளையாடி 41*, 23, 42*, 34* என்று மொத்தமாக 140 ரன்கள் எடுத்தார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஐபிஎல் 2025 தொடர் தொடங்குகிறது.
குறுகிய கால இடைவெளியில் தனது காதல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து போட்டோஷுட் நடத்தியுள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து ஐபிஎல் 2025 தொடர் தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தனது காதல் மனைவி அதியா ஷெட்டி கர்ப்பமாக இருக்கும் நிலையில் அவருடன் இணைந்து போட்டோஷுட் நடத்தியுள்ளார். விரைவில் அவர்களுக்கு குழந்தை பிறக்கும் நிலையில் தற்போது போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இருவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி இருவீட்டாரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். அதியா ஷெட்டி வேறு யாருமில்லை, அவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள். இவர்களது திருமணம் மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான வீட்டில் வைத்து நடைபெற்றது. இதில் சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக இடம் பெற்ற அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அந்த அணியின் கேப்டனாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அறிமுக சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று கடந்த 2023 ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் 2ஆவது முறையாக விளையாடி 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சீசனைப் போன்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது. கடந்த ஆண்டும் லக்னோ அணிக்கு கேப்டனாக இருந்தார். ஐபிஎல் 2024 தொடரில் லக்னோ விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
னால், நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரில் 18ஆவது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.14 கோடிக்கு கேஎல் ராகுல் ஏலம் எடுக்கப்பட்டார். அதோடு, அவருக்கு கேப்டன் வாய்ப்பு கொடுப்பதாக இருந்த நிலையில் கேப்டன் வாய்ப்பை மறுத்துள்ளார். இதன் காரணமாக டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் பொறுப்பு அடுத்ததாக அக்ஷர் படேலுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. வரும் 22ஆம் தேதி ஐபிஎல் 2025 தொடர் தொடங்கும் நிலையில் 24ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் 4ஆவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியானது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.