Jasprit Bumrah: ஜப்பானில் ஒரு கடையில் தலையணையை தேடிய ஜஸ்பிரித் பும்ராவை அவரது மனைவி சஞ்சனா கணேசன், ''இதுக்கா ஜப்பான் போனீங்க'' என கலாய்த்து தள்ளினார். இந்த சுவாரஸ்யமான செய்தி குறித்து பார்ப்போம்.
கிரிக்கெட் களத்தில் எதிரணிகளை மிரட்டும் டீம் இந்தியா பவுலர் ஜஸ்பிரித் பும்ராவை, அவரது மனைவி சஞ்சனா கணேசன் செமையாக கலாய்த்துள்ளார். ஜப்பான் சென்ற பும்ரா அங்கு அப்படி என்ன செய்தார் என்று இந்தச் செய்தியில் பார்க்கலாம். மைதானத்தில் பந்துவீசும் போது பும்ராவைப் பார்த்தாலே எதிரணிகளுக்கு நடுக்கம் வந்துவிடும். அந்த அளவுக்கு அவரது ஆக்ரோஷம் இருக்கும்.
ஆனால், தற்போது ஜப்பான் பயணத்தில் இருக்கும் பும்ராவை அவரது மனைவியே கலாய்த்துள்ளது தான் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக். பிரபல தொகுப்பாளினியும், பும்ராவின் மனைவியுமான சஞ்சனா கணேசன் பதிவிட்ட கமெண்ட் தற்போது செம வைரலாகியுள்ளது. சஞ்சனா அப்படி என்ன சொன்னார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
24
கடையில் தலையணையை தேடிய பும்ரா
இந்தியா - ஜப்பான் இடையிலான ஒரு டி20 போட்டியில் விளையாடுவதற்காகவும், ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காகவும் இந்திய அணி ஜப்பான் சென்றிருந்தது. அப்போது கிடைத்த ஓய்வு நேரத்தில், பும்ராவும் அக்சர் படேலும் அங்குள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளனர். தூங்குவதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகத் தான் அந்த விசிட்.
அங்கு பும்ரா, தனது கழுத்து மற்றும் தூங்கும் நிலைக்கு ஏற்றவாறு ஒரு 'கஸ்டமைஸ்டு' (Customised) தலையணையைத் தேடியுள்ளார். கடை ஊழியர்களும் மிகவும் சீரியஸாக பும்ராவின் கழுத்தை அளவெடுத்து சோதித்துக் கொண்டிருந்தனர். இதை கூடவே சென்ற அக்சர் படேல் வீடியோ எடுத்துச் சிரித்துக் கொண்டே இருந்துள்ளார்.
34
வைரலாகும் வீடியோ மற்றும் கமெண்ட்
அந்த வீடியோவில் பேசிய பும்ரா, "என்னோட தூக்கத்தைப் பற்றி இவ்வளவு ஆழமாக, இவ்வளவு டீடைலாக நான் யோசிச்சதே இல்ல. எனக்கு அப்புறம் அக்சர் பட்டேல் முறைதான்" என்று ஜாலியாகக் கூறியிருந்தார். அக்சர் படேல் எடுத்த இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் அதில் ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
"இதை பண்றதுக்காகவா இவ்வளவு தூரம் ஜப்பானுக்கு போனீங்க?" என்று கேட்டு தனது கணவரை சஞ்சனா ஜாலியாகக் கலாய்த்துள்ளார். கணவன் - மனைவிக்கு இடையிலான இந்த கியூட்டான உரையாடல் தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களும் தங்களது பங்கிற்கு வேடிக்கையான கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஜப்பான் அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. ஜப்பானின் சானோ நகரில் நடந்த 5 ஓவர் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மழை காரணமாக 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடந்தது. முதலில் பேட் செய்த உலக சாம்பியனான இந்தியாவை வெறும் 32/4 என்ற ஸ்கோருக்கு ஜப்பான் சுருட்டியது. பின்பு விளையாடிய ஜப்பான் அணி 5 ஓவர்கள் முடிவில் ஜப்பான் 30/3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.