ஐபிஎல் 2020: கடைசி நேரத்தில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு விழுந்த மரண அடி

First Published Sep 20, 2020, 4:03 PM IST

ஐபிஎல் 13வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதவுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் சீனியர் வீரர் இஷாந்த் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
 

ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நடந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
undefined
இன்றைய போட்டியில், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணிகள் மோதுகின்றன. துபாயில் நடக்கும் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.
undefined
இரு அணிகளின் மீதான எதிர்பார்ப்பும் இந்த சீசனில் அதிகமாகவுள்ள நிலையில், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டுமல்லாது, இரு அணிகளின் தலைமை பயிற்சியாளர்களும் மிகப்பெரிய லெஜண்டுகள். டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங்; பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே.
undefined
இருவருமே பெரிய லெஜண்டுகள் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. இரு அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
undefined
இளமையும் அனுபவமும் கலந்த சிறந்த அணியாக திகழும் டெல்லி அணிக்கு, சீனியர் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு ஏற்பட்டிருக்கும் காயம் பெரிய பின்னடைவு. சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, கடந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இன்று நடக்கும் முதல் போட்டியில் அவர் ஆடவில்லையென்றால், அவரது இடத்தில் யாரை இறக்குவது என்பது டெல்லி அணிக்கு சவாலான காரியம்.
undefined
டெல்லி கேபிடள்ஸ் அணி வீரர்கள்:ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), பிரித்வி ஷா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான், இஷாந்த் சர்மா, சந்தீப் லாமிஷன், காகிசோ ரபாடா, கீமோ பால், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், ரஹானே, அஷ்வின், ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.
undefined
click me!