முரளி விஜய் செய்த முட்டாள்தனம்.. டுப்ளெசிஸ் பேச்சை கொஞ்சம் கூட மதிக்காமல் நடையை கட்டிய அதிர்ச்சி

First Published Sep 20, 2020, 2:25 PM IST

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான முதல் போட்டியில், முரளி விஜய் அவுட்டே இல்லாததற்கு, அதுவும் டுப்ளெசிஸ் அழைத்து ரிவியூ எடுக்க சொல்லியும் கூட, அதை மதிக்காமல் முரளி விஜய் நடையை கட்டிய சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 

ஐபிஎல் 13வது சீசன் நேற்று தொடங்கியது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதிய முதல் போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி கணக்கை தொடங்கியது.
undefined
இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சுரேஷ் ரெய்னா ஆடாததால், நீண்ட இடைவெளிக்கு பிறகு, முரளி விஜய்க்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சீசனில் முரளி விஜய்க்கு பெரும்பாலும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரெய்னா இல்லாததால் இந்த சீசன் முழுவதும் ஆடும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. நேற்றைய போட்டியிலும் முரளி விஜய் தான் ஷேன் வாட்சனுடன்தொடக்க வீரராக இறங்கினார்.
undefined
ஆனால் கம்பேக் வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியில் அவர் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு ரன்னில் வெளியேறினார். அவுட்டே இல்லாததற்கு, அவசரப்பட்டு வெளியேறினார் முரளி விஜய்.
undefined
163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக, ஷேன் வாட்சனுடன் இணைந்து முரளி விஜய் களத்திற்கு வந்தார். ஷேன் வாட்சன் முதல் ஓவரிலும் முரளி விஜய் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர்.
undefined
ஜேம்ஸ் பாட்டின்சன் வீசிய 2வது ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார் முரளி விஜய். முரளி விஜய்க்கு அம்பயர் அவுட் கொடுத்த அந்த குறிப்பிட்ட பந்து, லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வதாக தெரிந்தது. ஆனாலும் அம்பயர் தவறுதலாக அவுட் கொடுக்க, அது அவுட்டா என்பது குறித்து மறுமுனையில் இருந்த டுப்ளெசிஸுடன் ஆலோசிக்காமலேயே நடையை கட்டினார் முரளி விஜய். ஆனால் டுப்ளெசிஸ் அவரை அழைத்து, ரிவியூ கேட்க சொன்னார். ஆனால் டுப்ளெசிஸ் பேச்சை பொருட்படுத்தாமல் முரளி விஜய் களத்திலிருந்து வெளியேறினார்.
undefined
தவறுதலாக ரிவியூ எடுத்துவிடக்கூடாது என்ற மனப்பான்மையில் முரளி விஜய், ரிவியூ எடுக்காமல் சென்றார் என்றாலும் கூட, டுப்ளெசிஸ் என்ற ஒரு சீனியர் வீரர், அவரே கூப்பிட்டு சொல்கிறார் எனும்போது, அதில் இருக்கும் அர்த்தத்தை உணர்ந்தாவது ரிவியூ எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். பின்னர் அந்த பந்தை ட்ராக் செய்து பார்க்கும்போது, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்றது தெரிந்தது.
undefined
click me!