IPL 2026 Points Table: 2 இடங்களுக்கு 5 அணிகள் போட்டி! டாப் கியரில் ஆர்சிபி.. தத்தளிக்கும் சிஎஸ்கே!

Published : May 18, 2026, 06:04 PM IST

IPL 2026 Points Table: ஐபிஎல் 2026 தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்ட நிலையில், ஐபிஎல் புள்ளிப்பட்டியல் குறித்தும், அணிகளின் நிலை என்ன? என்பது குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம். 

PREV
14
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் 2026 தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று (மே 18) மிக முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போதய நிலவரப்படி ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல் எப்படி உள்ளது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். தற்போதைய தரவரிசையின்படி ஆர்சிபி அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

24
ஆர்சிபி கெத்து; சிஎஸ்கே நிலைமை மோசம்

குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 13 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி 12 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், ராஜஸ்தான், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இதே 12 புள்ளிகளுடன் 6வது மற்றும் 7வது இடத்தில் வீற்றிருக்கின்றன. புள்ளிபட்டியலில் ஆர்சிபி, குஜராத் தவிர ஹைதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான், சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையே கடைசி இரண்டு பிளே-ஆஃப் இடங்களுக்கான போட்டி மிகத் தீவிரமாக உள்ளது.

34
சிஎஸ்கேவுக்கு வாழ்வா? சாவா? போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. பிளே-ஆஃப் வாய்ப்பைத் தக்கவைக்க சென்னை அணிக்கு இப்போட்டி மிகவும் முக்கியமானதாகும். சிஎஸ்கே இந்த போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி அடுத்து வரும் குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக இருந்தால் தான் சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் சிஎஸ்கே போட்டியை விட்டு வெளியேற வேண்டியது தான்.

44
வெளியேறிய அணிகள் என்னென்ன?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை அணியை வீழ்த்தினால் ஹைதராபாத் அணி தனது பிளே-ஆஃப் இடத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ய அதிக வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் கடைசி இரண்டு இடங்களில் உள்ளதால், நடப்பு சீசனின் பிளே-ஆஃப் பந்தயத்தில் இருந்து ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories