அசாமின் தலைநகர் கவுகாத்தி, தொடக்க சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியின் இரண்டாவது இடமாகும். நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடம்பெறும் என்பதால், போட்டியின் தொடக்க ஆட்டம் எங்கு நடத்தப்படும் என்பது குறித்தும் ஐபிஎல் நிர்வாகக் குழு விவாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு சின்னசாமியில் போட்டிகள் நடக்காதா?
கடந்த ஜூன் மாதம் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் RCB-யின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, RCB-யின் ஏழு சொந்த மைதானப் போட்டிகளை சின்னசாமி ஸ்டேடியத்தில் நடத்தலாமா அல்லது வேறு இடத்திற்கு மாற்றலாமா என்பது குறித்து கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துடன் (KSCA) பெங்களூரு அணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, நவி மும்பை, ராய்ப்பூர் மற்றும் புனே உள்ளிட்ட சில மாற்று இடங்களை RCB பட்டியலிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.