ஐபிஎல் 2020: முதல் போட்டியில் MI vs CSK பலப்பரீட்சை.. எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு..? ஓர் அலசல்

First Published Sep 19, 2020, 1:17 PM IST

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே, சமபலம் வாய்ந்த, ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளான மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் மோதுகின்றன. இந்த போட்டியில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த அலசல்..
 

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்குகிறது. அபுதாபியில் நடக்கும் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மோதுகின்றன. ஐபிஎல்லில் கோலோச்சும் இரு அணிகளும் முதல் போட்டியில் மோதுவதால், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
undefined
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளை பொறுத்தமட்டில் இரு அணிகளுமே கோர் டீம் வலுவாக உள்ள அணிகள். களவியூகம், வெற்றி பெறுவதற்கான உத்தி, கடைசி வரை போராடும் குணம் ஆகியவற்றில் ஒரே மாதிரியான அணிகள். இரு அணிகளின் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் தோனி ஆகிய இருவரும் கேப்டன்சியிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல.
undefined
எனவே போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் இந்த போட்டியை பொறுத்தமட்டில், மும்பை இந்தியன்ஸுக்கான வெற்றி வாய்ப்பு சற்று அதிகம்.
undefined
சிஎஸ்கே அணியில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு. மேலும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஷேன் வாட்சன், ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு போட்டிகளிலோ ஆடி நீண்டகாலம் ஆகிவிட்டது. அதனால், பயிற்சியில் ஆடியிருந்தாலும் கூட, களத்தில் இறங்கி ஆடி நீண்ட காலம் ஆயிற்று. முரளி விஜய் ஒருவேளை இறக்கப்பட்டாலும், அவரது நிலையும் அதே தான்.
undefined
dhoni bravo
undefined
ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தமட்டில், குயிண்டன் டி காக் கடைசியாக ஆடியவரை நல்ல ஃபார்மிலேயே இருந்தார். ஹர்திக் பாண்டியா பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக தனக்கே உரிய பாணியில் அடித்து நொறுக்கினார். மேலும் பொல்லார்டு, இப்போதுதான் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆடிவிட்டு வந்தார் என்பதால் அவரும் தெறிக்கவிடுவார். ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரும் உள்ளனர்.
undefined
எனவே பேட்டிங்கை பொறுத்தமட்டில் மும்பை இந்தியன்ஸ் தான் பலமாக திகழ்கிறது. அதேபோல பவுலிங்கை பார்த்தாலும், பும்ரா, டிரெண்ட் போல்ட், நேதன் குல்ட்டர்நைல் என ஃபாஸ்ட் பவுலிங் மிரட்டலாக உள்ளது. சிஎஸ்கேவில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் ஆகியோர் இருந்தாலும், பும்ரா - டிரெண்ட் போல்ட்டின் தரத்திற்கு அவர்களை ஒப்பிட முடியாது. வீரர்கள் அடிப்படையில் எவ்வளவு வலுவாக இருந்தாலும் களத்தில் அந்த குறிப்பிட்ட தினத்தில் ஆடுவதை பொறுத்துத்தான் போட்டியின் முடிவு இருக்கும் என்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக உள்ளது.
undefined
சிஎஸ்கேவில் இம்ரான் தாஹிர், பியூஷ் சாவ்லா, ஜடேஜா ஆகிய தரமான ஸ்பின்னர்கள் இருந்தாலும், மும்பை இந்தியன்ஸில் அந்த ஸ்பின்னை தெறிக்கவிடும் அளவிற்கு பாண்டியா, பொல்லார்டு என அதிரடி பேட்டிங் ஆர்டர் உள்ளது.
undefined
மேலும் போட்டி நடக்கும் அபுதாபி, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸின் ஹோம் கிரவுண்ட். அந்த அணி அங்குதான் பயிற்சியை மேற்கொண்டது. துபாய் ஷேக் சயீத் மைதானம் தான் சிஎஸ்கேவிற்கு ஹோம் கிரவுண்ட். அபுதாபியில் கடந்த ஒரு மாதமாக மும்பை இந்தியன்ஸ் தங்கி பயிற்சி செய்வதால், அந்த கண்டிஷன் சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸுக்கு நன்றாக தெரியும். சிஎஸ்கேவிற்கு அது சவாலாக இருக்கும்.
undefined
எனவே பேட்டிங், பவுலிங், கண்டிஷன் ஆகியவற்றின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸுக்கான வெற்றி வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது.
undefined
click me!