
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி குவாலியரின் கிரிக்கெட் பாரம்பரியமான வேறு இடத்திலிருந்து தொடங்க இருக்கிறது. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக குவாலியரில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட நீண்ட இடைவெளிக்குப் பிறக் கிரிக்கெட் தொடரானது பாரம்பரிய இடத்திற்கு திரும்புகிறது.
வரும் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நடக்க இருக்கிறது. குவாலியரில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த வரலாற்று நிகழ்வானது புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமந்த் மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இது கிரிக்கெட் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீமந்த் மாதவ் ராவ் சிந்தியா கிரிக்கெட் ஸ்டேடியம் அதன் முதல் சர்வதேச போட்டியை 6ஆம் தேதி நடக்கிறது. ஆனால் குவாலியரின் கிரிக்கெட் வரலாறு சின்னமான கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் தான் ஆரம்பமானது. பல மறக்கமுடியாத கிரிக்கெட் தருணங்களைக் கண்ட இந்த மைதானம், முதலில் ஹாக்கி ஸ்டேடியமாக இருந்தது. 2 முறை ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தியான் சந்தின் இளைய சகோதரர் ரூப் சிங்கின் நினைவாக அந்த மைதானத்திற்கு ரூப் சிங் என்று பெயரிடப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி ரூப் சிங் ஸ்டேடியத்தில் கடைசியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சர்வதேச போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் தான் இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இது குறித்து வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, இது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட தருணம். இந்த மைதானத்தில் 200 ரன்களை எட்டிய முதல் வீரர். இந்தியாவின் சூப்பர் மேன் என்று குறிப்பிட்டார்.
குவாலியரின் கேப்டன் ரூப் சிங்கின் மைதானம், உலகக் கோப்பை உள்பட பல சர்வதேச போட்டிகளை நடத்தியுள்ளது. ஆனால், நிறவெறி காரணமாக பல பிரச்சனைகளை சந்தித்த பிறகு இந்த மைதானத்தில் பல ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படவில்லை. அதன் பிறகு மீண்டும் 1991 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டது. இந்திய அணிக்கு சாதமாக இருந்த இந்த மைதானம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
1996 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியானது பகல் இரவு போட்டியாக நடைபெற்றது. இப்படி பல முக்கியமான போட்டிகளை நடத்திய குவாலியர் ரூப் சிங் ஸ்டேடியத்தில் பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் தான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு குவாலியரில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. ஆனால், புதிதாக வடிவமைக்கப்பட்ட மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்த மைதானத்தில் நடத்தப்படும் முதல் சர்வதேச டி20 போட்டியில் தான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன.
கேப்டன் ரூப் சிங் மைதானத்தின் மறக்க முடியாத போட்டிகள்:
1988 ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஒருநாள் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திற்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதே போன்று மற்றொரு நாள் நடைபெற்ற இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2010 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் இந்தியா 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தான் சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் விளாசினார்.