India's Richest Women Cricketer: இந்தியா மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர், இந்தியாவின் பணக்கார மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக திகழ்கிறார். ஏன், அவரது சொத்து மதிப்பு எவ்வளவு, கிரிக்கெட்டில் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம். இந்திய கிரிக்கெட்டில் ஹர்மன்ப்ரீத் கவுர் என்ற பெயர் சில காலமாக தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் முதல் மகளிர் இந்தியன் பிரீமியர் லீக் வரை விளையாட்டின் ஒவ்வொரு வடிவத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி முத்திரை பதித்து வருகிறார். இதுவரையில் ஹர்மன்ப்ரீத் கவுர் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 3445 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 3112 ரன்களும் எடுத்துள்ளார். இதே போன்று ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 32 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகள் வீத்திய கைப்பற்றிய வீராங்கனைகளில் ஹர்மன்ப்ரீத் கவுரும் ஒருவர். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக திகழ்கிறார். இவ்வளவு ஏன் இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்களான சச்சின், கோலி, சேவாக் ஆகியோரிடமிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சிறந்த வீராங்கனைக்காக அர்ஜூனா விருதும் வென்றார்.
மகளிர் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதம் விளாசிய இந்திய வீராங்கனை என்ற சாதனயை இவர் படைத்தார். 2018 டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை ஹர்மன்ப்ரீத் கவுர் படைத்தார். அதுமட்டுமின்றி டி20 கிரிக்கெட்டில் 3000 ரன்களுக்கு மேல் குவித்த வீராங்கனை என்ற சாதனை இவரையே சேரும். டி20 தொடரில் கேப்டனாக 114 போட்டிகளில் விளையாடி 3000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்தியாவில் 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையும் சாதனையும் இவரையே சேரும்.

தற்போது 35 வயதாகும் ஹர்மன்ப்ரீத் இன்னும் வெற்றி பெற வேண்டும் என்ற தீரா பசியுடன் இருக்கிறார். இதுவரை, ஹர்மன்ப்ரீத் கவுர் மகளிர் டி20 ஆசிய கோப்பை (2012, 2016, 2022), மகளிர் பிரீமியர் லீக் (2023), 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பஞ்சாப் காவல் துறையில் வேலை கிடைக்காத ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இந்திய ரயில்வேயில் அரசு வேலை கிடைத்தது.
இதையடுத்து, இந்தியாவின் பணக்கார மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக திகழும் ஹர்மன்ப்ரீத் கவுரின் வருமானம் எவ்வளவு, சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்க்கலாம். பிரபல ஆங்கிய பத்திரிக்கையின் அறிக்கையின்படி, ஹர்மன்ப்ரீத் கவுரின் நிகர சொத்து மதிப்பு ரூ.25 கோடி ஆகும். லிஸ்ட் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வருமானம் பெறுகிறார்.
இந்திய மகளிர் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்மன்ப்ரீத் கவுர் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரூ.1.80 கோடி வருமானம் பெறுகிறார். கிரிக்கெட் மூலமாக அதிக வருமானம் பெறுவதைக் காட்டிலும் பிராண்ட் ஒப்பந்தம், விளம்பரங்கள் மூலமாக அதிக வருமானம் ஈட்டுகிறார்.
ஹர்மன்ப்ரீத் கவுர், HDFC Life, CEAT, Nike, PUMA, Boost ஆகிய புகழ்பெற்ற பிராண்டுகளின் விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளார். மும்பை மற்றும் பாட்டியாலாவில் ஆடம்பரமான சொகுசு வீடுகள் இருக்கிறது.