ஜமைக்கா முதல் இந்தியா வரை – பிரதமர் மோடியை சந்தித்த யுனிவர்சல் பாஸ் பாயும் புலி கெயில் – என்ன காரணம் தெரியுமா?

First Published | Oct 4, 2024, 11:43 AM IST

From Jamaica to India, Chris Gayle Met Narendra Modi: கிறிஸ் கெயில், ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸுடன் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வந்துள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

Chris Gayle

வெஸ்ட் இண்டீஸின் ஜாம்பவான் யுனிவர்சல் பாஸ் என்று அழைக்கப்படும் கிரிக்கெட்டர் கிறிஸ் கெயில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த விடீயோவை ஒன்லவ் என்ற ஹேஷ்டேக்கில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ் 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் ஜமைக்கா இடையில் நட்புறவை பேணும் வகையில் தற்போது மோடி மற்றும் ஹோல்னஸ் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.

Chris Gayle Instagram Video with PM Modi

PM Modi and Chris Gayle

ஜமைக்கா பிரதமருடன் கிறிஸ் கெயிலும் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பகிர்ந்த கெயில், மோடியை பார்த்து நமஸ்தே என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுவரையில் கிரிக்கெட் விளையாடவே இந்தியா வந்த கெயில் தற்போது முதல் முறையாக ஜமைக்கா பிரதமருடன் இணைந்து அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காகவே கோட் சூட்டில் வந்து அசத்தியிருக்கிறார்.

Chris Gayle Instagram Video with PM Modi

Latest Videos


Chris Gayle and PM Modi

இந்த சந்திப்பு நிகழ்ச்சி குறித்து ஜமைக்கா பிரதமர் கூறியிப்பதாவது: கிறிஸ் கெயில் ஒரு ஜமைக்கா பிரதிநிதியாக மட்டுமல்லாமல் கிரிக்கெட்டிற்காகவும் அறியப்படும் ஜாம்பவான். அவர் அனைவராலும் போற்றப்படுகிறார். மதிக்கப்படுகிறார். இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயில் எங்களுடன் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு ஜமைக்கா தொழிலதிபர்களும் இணைந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.

Chris Gayle Instagram Video with PM Modi

Chris Gayle

1999 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய கெயில் பல சாதனைகளை படைத்திருக்கிறார். 103 டெஸ் போட்டிகளில் விளையாடி 15 சதம், 37 அரைசதம் உள்பட மொத்தமாக 7214 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று, 301 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 25 சதம், 54 அரைசதம் உள்பட மொத்தமாக 10,480 ரன்கள் குவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 215 ரன்கள் எடுத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் 79 போட்டிகளில் விளையாடி 2 சதம், 14 அரைசதம் உள்பட மொத்தமாக 1899 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chris Gayle Instagram Video with PM Modi

click me!