சுப்மன் கில்லுக்காக பலிகடாவாகும் சஞ்சு சாம்சன்..! ஆசியக்கோப்பை இந்திய அணி பிளேயிங் லெவன் இதோ..!

Published : Aug 22, 2025, 09:06 AM IST

ஆசியக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிளேயிங் லெவனில் யார்? யார்? இடம்பெறுவார்கள் என்பது குறித்து பார்ப்போம்.

PREV
15
Asia Cup 2025: Predicted Indian XI – No Sanju Samson

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஹாங்காங் ஆகிய 8 அணிகள் விளையாடும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் 9ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 போட்டி வடிவத்தில் நடைபெறும் இந்த தொடரில் உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

25
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி

ஆசியக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரை சமன் செய்து சாதித்த‌ கேப்டன் சுப்மன் கில் ஆசியக்கோப்பையில் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ஜெஸ்ய்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. இதேபோல் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஷ்ரேயாஷ் ஐயருக்கும் அணியில் இடம் கிடைக்காதது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

35
பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு இடமில்லை

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அதிரடி வீரர் ஷிவம் துபேவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் கேரளாவை சேர்ந்த அதிரடி வீரர் சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிங்கு சிங்கும் இடம் பிடித்துள்ளார். ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ரிங்கு சிங் இடம் பெற்றிருந்தாலும், பிளேயிங் XI அணியில் இவர்கள் இருவரும் இடம்பெற வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கில்லால் பறிபோகும் சஞ்சு இடம்

இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் மீண்டும் களமிறங்குவதால் அபிஷேக் சர்மாவுடன் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் சஞ்சு சாம்சனின் இடம் பறிபோகியுள்ளது. அதுபோக ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக இருப்பதால் சஞ்சுவுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் தான். இதேபோல் ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ரிங்கு சிங் மற்றும் ஷிபம் துபேவுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

45
வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்குமா?

அதிரடி வீரர்கள் அபிஷேக் சர்மா, திலக் வர்மா பிளேயிங் வெலனில் இடம் பிடிப்பார்கள். குல்தீப் யாதவ், அக்சர் படேல் இருப்பதால் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைப்பது கஷ்டம் தான். பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா, அர்ஷ்தீப் சிங் இடம் பெறுவார்கள். இதனால் பிளேயிங் லெவனில் அந்தந்த பிட்ச் சூழ்நிலையை பொறுத்து ஹர்சித் ராணா அல்லது வருண் சக்கரவர்த்தி இடம் பெறுவார்கள்.

55
இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் ( துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி அல்லது ஹர்ஷித் ராணா.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷித் ரானா.

Read more Photos on
click me!

Recommended Stories