Ravindra Jadeja and Rivaba Love Story:காதல் முதல் எம்எல்ஏ வரை – ஜடேஜாவின் மனைவி ரிவாபாவின் கண்டதும் காதல் கதை!

Published : Aug 20, 2024, 04:52 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா ஜடேஜாவின் காதல் கதை, திருமணம், அரசியல் பயணம் பற்றிய ஒரு பார்வை.

PREV
18
Ravindra Jadeja and Rivaba Love Story:காதல் முதல் எம்எல்ஏ வரை – ஜடேஜாவின் மனைவி ரிவாபாவின் கண்டதும் காதல் கதை!
Ravindra Jadeja Wife

ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிவாபா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் எப்படி சந்தித்து கொண்டார்கள், எங்கு காதல் மலர்ந்தது, நிச்சயதார்த்தம், திருமணம், எம்.எல்.ஏ, அரசியல் பயணம் பற்றி பார்க்கலாம் வாங்க.

28
Ravindra Jadeja and Wife Rivaba Jadeja

இந்திய அணியில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் ரவீந்திர ஜடேஜா. சமீப காலமாக ஜட்டுவின் ஃபெர்மான்ஸ் சரியில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரது வரிசையில் டி20 கிரிக்கெட்டிலிருந்து ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெற்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கேயின் வெற்றிக்கு வித்திட்டார்.

38
Ravindra Jadeja Daughter

தோனி மட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ஜட்டுவை கொண்டாடினர். சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா இடம் பெறவில்லை. வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவீந்திர ஜடேஜா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

48
Rivaba Jadeja

இது ஒரு புறம் இருக்க, ரவீந்திர ஜடேஜா மற்றும் அவரது மனைவி ரிவாபா முதன் முதலில் ஒரு பார்ட்டியில் சந்தித்துள்ளனர். கடந்த 1990 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த் ஹர்தேவ் சிங் சொலாங்கி மற்றும் பிரஃபுல்லாபா சொலாங்கி தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் ரிவாபா.

58
Ravindra Jadeja Wife IPL

இவர், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் படித்து முடித்துள்ளார். மாமா காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவியில் இருந்ததைப் போன்று கர்னி சேனா அமைப்பில் மகளிரணியில் ரிவாபா முக்கிய பதவியில் இருந்தார். ஜடேஜாவின் சகோதரி நைனாபாவுடன் நெருங்கிய நட்பு உறவில் இருந்துள்ளார்.

68
Ravindra Jadeja Wife

அப்போது தான் ஒரு பார்ட்டியில் ஜடேஜா மற்றும் ரிவாபா இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. சில மாதங்கள் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு ஜடேஜாவிற்கு சொந்தமான ஜட்டுஸ் ஃபுட் ஃபீல்டு ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

78
Rivaba Jadeja

திருமணத்தைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு ரிவாபா பாஜகவில் இணைந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.

88
Ravindra Jadeja and Rivaba

தனது அரசியல் பயணத்தோடு ஜட்டுவின் தொழில்களையும் ரிவாபா கவனித்து வருகிறார். ரிவாபாவிற்கு அரசியலில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories