அசுர கொள்ளளவு: சுமார் 1,32,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், நாளை ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிரப்போகிறது. பாரம்பரிய விளக்கு கோபுரங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள LED ரிங் விளக்குகள் நிழல் விழாத வெளிச்சத்தைத் தரும்.
ஆடுகளம்: இங்குள்ள 11 ஆடுகளங்களில் சிவப்பு மற்றும் கருப்பு மண் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிற்கும் சமமான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிட்ச் சீமர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இறுதிப் போட்டியில் அதிகமான பவுன்சர்களை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த பிட்ச் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்காது என்று சொல்லப்படுகிறது.
200+ கண்பார்ம்..
இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு கை கொடுக்குமென்பதால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் டியூ தான் அதனை முடிவு செய்யும். மேலும் இந்திய அணியில் கிட்டத்தட்ட 8 விக்கெட் வரை அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்திருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்கள் ஈசியாக 200+ ரன்களை அடிப்பார்கள் என கணிக்கப்படுகிறது.