IND vs ENG 2nd T20: இந்திய அணி பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்! சிக்சர் மன்னன் நீக்கம்! வைபவ் சூர்யவன்ஷி உள்ளே!

Published : Jul 04, 2026, 09:54 AM IST

IND vs ENG 2nd T20: இந்தியா-இங்கிலாந்து 2வது டி20 போட்டி இன்று (ஜூலை 4) நடைபெற உள்ள நிலையில், இந்திய பிளேயிங் லெவனில் பெரும் மாற்றம் வந்துள்ளது. சிக்சர் மன்னன் நீக்கப்பட்டு வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படுகிறார்.

PREV
15
இந்தியா, இங்கிலாந்து 2வது டி20; வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம்?

இந்தியா-இங்கிலாந்து டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று (ஜூலை 4) சனிக்கிழமை ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கிறது. தனது அதிரடியால் கலக்கி வரும் 15 வயதான இளம் பாலகன் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாவாரா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமானால், இந்திய கிரிக்கெட்டில் (ஆண்கள்/பெண்கள்) மிக இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற சாதனையை படைப்பார்.

சஞ்சு சாம்சன் இடத்தை தக்க வைப்பாரா?

டி20 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் அயர்லாந்து போட்டியிலும் சொதப்பினார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் சொற்ப ரன்களில் வெளியேறினார். சஞ்சு சாம்சன் ஒரு மேட்ச் வின்னர். இரண்டொரு போட்டிகளில் சொதப்பியதால் அதை வைத்து மட்டுமே அவரை நீக்கக் கூடாது என்ற வாதம் வலுத்துள்ளது. மேலும், அவர் ஒரு வலது கை பேட்ஸ்மேன் என்பதால், டாப் 3 பேட்ஸ்மேன்கள் இடது கை வீரர்களாக மாறும் சிக்கலை தவிர்க்கலாம்.

25
இஷான் கிஷன் நீக்கப்படுகிறாரா?

டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தாலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இஷான் கிஷன் சோபிக்கவில்லை. கடைசி இரண்டு போட்டிகளிலும் அவர் ரன் அவுட் ஆனார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷனை நீக்கிவிட்டு வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சிறப்பாக ஆடிய அபிஷேக் ஷர்மா, தனது தொடக்க வீரர் இடத்தை தக்கவைத்துக் கொள்வது உறுதி. இங்கிலாந்துக்கு எதிராக மழையால் கைவிடப்பட்ட முதல் டி20 போட்டியிலும் அவர் அரைசதம் அடித்திருந்தார்.

35
திலக் வர்மாவுக்கும் சிக்கல்

அயர்லாந்துக்கு எதிராக ஐந்தாவது இடத்தில் இறங்கி அரைசதம் அடித்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக திலக் வர்மா மீண்டும் ஏமாற்றினார். 13 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த அவரது ஒருநாள் போட்டி போன்ற மெதுவான ஆட்டம் அணிக்கு தலைவலியாக உள்ளது. முதல் போட்டியில் அதிரடியான ஃபினிஷிங் மூலம் அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்றுத் தந்த ஷிவம் துபே, இரண்டாவது போட்டியிலும் பிளேயிங் லெவனில் தொடர்வார். இதனால், சூர்யான்ஷ் ஷெட்கே மீண்டும் வெளியே அமர வேண்டியிருக்கும்.

45
இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது

முதல் டி20 போட்டியில் இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, ஓல்ட் டிராஃபோர்டிலும் பந்துவீச்சு வரிசையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார்கள். இந்தியா-இங்கிலாந்து இரண்டாவது டி20 போட்டி இன்று மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கிறது. முதல் போட்டி இந்திய நேரம் இரவு 10 மணிக்கு நடந்த நிலையில், இந்த போட்டி இந்திய நேரம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியாவில், சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், ஜியோ ஹாட்ஸ்டாரிலும் போட்டியை நேரலையில் காணலாம்.

55
இந்திய அணியின் பிளேயிங் லெவன்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

Read more Photos on
click me!

Recommended Stories