#AUSvsIND 2வது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி..! ரசிகர்கள் அதிர்ச்சி.. வெற்றி விளிம்பில் ஆஸி.,

First Published Dec 19, 2020, 12:35 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் வெறும் 36  ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்துவருகிறது. நேற்று முன் தினம்(17ம் தேதி) தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் அடித்தது.
undefined
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் டிம் பெய்ன்(73) மற்றும் லபுஷேன்(47) ஆகிய இருவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. பும்ரா, அஷ்வின், உமேஷ் யாதவின் பவுலிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
undefined
2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மயன்க் அகர்வாலுடன், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்டார் பும்ரா. அவர்கள் இருவரும் 3ம் நாளான இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய ஆட்டம் தொடங்கியதிலிருந்து சீரான இடைவெளியில், மயன்க் அகர்வால், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, சஹா, அஷ்வின் என அனைவருமே அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கே சுருண்டது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ஹேசில்வுட் ஐந்து விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
undefined
இதையடுத்து, வெறும் 89 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது இந்திய அணி. 90 ரன்கள் என்ற எளிய இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிவருகிறது. மிக எளிய இலக்கு என்பதால், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
undefined
click me!