இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலே மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 அன்று கொழும்புவிலும் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் நோக்கில், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது.
தற்போதைய சூழலில், இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தியா மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7-ல் வெற்றி பெற வேண்டும். எனவே, நியூசிலாந்துக்கு எதிரான உள்நாட்டுத் தொடருக்கு முன்பாக, இலங்கையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்துவது இந்திய அணியின் முக்கிய இலக்காக உள்ளது.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி
சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்ஷன் (ஃபிட்னஸைப் பொறுத்து), துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மனவ் சுதர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், சரன்ஷ் ஜெயின்.