IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!

Published : Oct 27, 2026, 05:10 PM IST

IND vs NZ 3rd T20: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், அதிவேக சதம், அதிவேக பவர்பிளே ரன்கள் என ஒரே போட்டியில் பல்வேறு ரிக்கார்டுகளை உடைத்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

PREV
14
இந்திய அணி மாபெரும் வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையிலேயே தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இன்று வெலிங்டனில் உள்ள ஹென்றி மைதானத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் தலா 5 பவுண்டரி மற்றும் சிக்ஸர்களுடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபின் ஆலன் 25 பந்துகளில் 5 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார்.

24
அபிஷேக் சர்மா 35 பந்துகளில் சதம்

பின்பு 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா எளிதாக வென்றது. 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றியை ருசித்தது.

நியூசிலாந்து பவுலர்களை கதற விட்ட அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளி அரைசதம் விளாசினார். வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். இறுதிவரை அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மொத்தம் 9 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களை பறக்க விட்டு அசத்தினார்.

34
இந்தியா முழுமையாக ஆதிக்கம்

மற்றொரு பக்கம் இளம் வீரர் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி 4 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி அவுர் ஆனார். இந்திய அணி வெறும் 13.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து மாபெரும் வெற்றி பெற்றது. தொடரையும் அசத்தலாக வென்றுள்ளது.

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி இந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துவது இதுவே முதல் முறை. பந்துவீச்சாளர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும், பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் தொடர் வெற்றி உறுதியானது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்வதே இப்போது இந்தியாவின் இலக்காக உள்ளது.

44
அதிவேக சதம்; அதிக பவர்பிளே ரன்கள்

நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் கதற விட்ட இந்திய அணி ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்துள்ளது. அதாவது பேட்டிங்கின்போது வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்களை தொட்ட இந்திய அணி 14 பந்துகளில் அதிவேகமாக 50 ரன்களை தொட்ட முதல் அணி என்ற சாதனையை படைத்தது. இதேபோல் வெறும் 5 ஓவர்களில் அதாவது 30 பந்துகளில் 100 ரன்களை தொட்ட முதல் அணி என்ற சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது.

இதுமட்டுமின்றி அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் காட்டடியால் பவர்பிளேயின் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்திய அணி படைத்தது.

இன்றைய சதத்துடன் 11 டி20 சதங்களை அடித்துள்ள அபிஷேக் சர்மா, விராட் கோலியின் 10 டி20 சதங்களை முறியடித்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories