என்னா அடி! அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்.. 35 பந்துகளில் சதம்.. சாதனை மேல் சாதனை படைத்த இந்தியா!

Published : Oct 27, 2026, 03:32 PM ISTUpdated : Oct 27, 2026, 05:22 PM IST

Abhishek Sharma: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். ஒரே போட்டியில் பல்வேறு சாதனைகளை இந்திய அணி படைத்தது.

PREV
15
இந்தியா, நியூசிலாந்து 3வது டி20 போட்டி

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துது. டேரில் மிட்செல் 52 பந்துகளில் 89 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஃபின் ஆலன் (25 பந்துகளில் 40), பெவோன் ஜேக்கப்ஸ் (23 பந்துகளில் 39*) ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும், நிதிஷ் குமார் ரெட்டி 23 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் எடுத்தனர்.

25
அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி காட்டடி

பின்பு 199 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வீரர்கள் அதிரடியில் பட்டையை கிளப்பினார்கள். தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மாவும், வைபவ் சூர்யவன்ஷியும் ஆரம்பம் முதலே சிக்சர் மழை பொழிந்தனர். பவுண்டரிகளையும் ஓட விட்டனர். முதல் ஓவரில் மட்டும் 26 ரன்கள் நொறுக்கிய இந்திய அணி வெறும் 2.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. இதன்மூலம் 14 பந்துகளில் அதிவேகமாக 50 ரன்களை தொட்ட முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.

35
இந்திய அணி சாதனை மேல் சாதனை

ஒருபக்கம் அபிஷேக் சர்மா நியூசிலாந்து பாஸ்ட் பவுலர்களின் ஓவர்களில் காட்டடி அடிக்க, மறுபக்கம் வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடியில் பட்டையை கிளப்பினார். இவர்களின் மின்னல்வேக அதிரடியால் பவர்பிளேவின் 6 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்து பிரம்மிக்க வைத்தது. இதன்மூலம் பவர்பிளேயில் அதிக ரன்கள் எடுத்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்திய அணி படைத்தது. தொடர்ந்து அட்டகாசமாக ஆடிய அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 7 ஓவர்களில் 133 ரன்கள் குவித்தது.

45
35 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா

மறுமுனையில் சூப்பராக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 45 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அவர் அவுட் ஆனாலும் அபிஷேக் சர்மா தனது அதிரடியை நிறுத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து மைதானத்தின் நாலாபுறமும் சிக்சர்களை பறக்க விட்ட அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். தொடர்ந்து அவர் 38 பந்துகளில் 11 சிக்சர்கள், 9 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

55
டி20 தொடரை வென்றது இந்தியா

இதனைத் தொடர்ந்து இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. சமீபத்தில் அயர்லாந்து மண்ணில் டி20 தொடரை இழந்த இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் மிக அசாத்தியமாக விளையாடி தொடரை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இன்னும் 2 போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை முழுமையாக வொயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories