ஐபிஎல் 2025: ஐபிஎல் வரலாற்றை முறியடிக்க ரெடியாகும் ஸ்டார் பிளேயர்ஸ் –கோலிக்கு ரூ.50 கோடியா?

First Published | Oct 22, 2024, 4:54 PM IST

RCB Retained Virat Kohli 50 Crores: ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் நவம்பரில் நடக்கவுள்ளது. அணிகள் வரும் 31 ஆம் தேதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். தக்கவைப்பு தொகை மற்றும் வீரர்களின் ஊதிய வரம்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

IPL 2025, Indian Premier League

IPL 2025 Retentions: ஐபிஎல் 2025 தொடருக்கான ஏலம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ ஏற்கனவே தேர்வு செய்துள்ளது. விரைவில் அதற்கான முறையான அறிவிப்பை பிசிசிஐ வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதிக்குள் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

RCB Retained Players

மேலும், இந்த ஆண்டு ஒரு ஆர்டிஎம் உள்பட 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. ஐபிஎல் 2025 ஏலத்திற்கு முன்னதாக அதிரடி வீரரான ஹென்ரிக் கிளாசெனை ரூ.23 கோடிக்கு தக்க வைக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முன் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Tap to resize

RCB Retentions, IPL 2025

இதே போன்று ஒவ்வொரு அணியிலும் தக்க வைக்கப்படும் வீரர்கள் அதிக தொகையை எதிர்பார்ப்பார்கள் என்று தெரிகிறது. ஐபிஎல் 2025 புதிய விதிகளின்படி வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் வரம்பு மாற்றப்பட்டுள்ளது.

IPL 2025, IPL, IPL 2025 Retentions

மெகா ஏலத்திற்கு முன் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, முதல் கேப்டு வீரருக்கு ரூ.18 கோடி, 2ஆவது வீரருக்கு ரூ.14 கோடி, 3ஆவது வீரருக்கு ரூ.11 கோடி, 4ஆவது வீரர் ரூ. 18 கோடி, 5ஆவது வீரர் ரூ. 14 கோடி வழங்க வேண்டும். மேலும் ஒரு அன்கேப்டு வீரரை தக்க வைத்துக் கொண்டால், ரூ. 4 கோடி வழங்க வேண்டும்.

RCB, IPL, IPL 2025, RCB Retained Players

இதன் மூலமாக ஒரு அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு ரூ.79 கோடி வரையில் செலவிடப்படும். ஆனால், இது ஏலத்தின் போது மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது இப்போ ஆர்சிபியில் விராட் கோலி, முகமது சிராஜ் மற்றும் ஃபாப் டூப்ளெசிஸ் ஆகியோர் தக்க வைக்கப்படுவதாக இருந்தால் கோலிக்கு ரூ.29 கோடி, சிராஜ் ரூ.25 கோடி மற்று டூப்ளெசிஸ் ரூ.25 கோடி கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் விராட் கோலிக்கு ரூ.50 கோடி என்றால் மற்ற வீரர்களுக்கு ரூ.29 கோடி வழங்கப்படும்.

Latest Videos

click me!