IPL 2026 Final: ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், ஆர்சிபி வீரர் விராட் கோலி மற்றும் குஜராத் வீரர் ஷுப்மன் கில் ஆகியோரின் ஃபைனல்ஸ் ரெக்கார்டுகள் எப்படி இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இறுதியில் போட்டியில் அடித்த ரன்கள் குறித்து பார்க்கலாம்.
25
ஃபைனல் போட்டிகளில் கோலியின் ஆட்டம்
ஆர்சிபி அணி இதுவரை நான்கு முறை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளது. அந்த நான்கு ஃபைனல்களிலும் கோலியின் ஆட்டம் எப்பது என்பதை பார்ப்போம். 2009, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக7 ரன்கள், ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2011, சிஎஸ்கே அணிக்கு எதிராக 35 ரன்கள், ஆர்சிபி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2016, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 54 ரன்கள், ஆர்சிபி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2025, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக, 43 ரன்கள் ஆர்சிபி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
35
ஃபைனல் போட்டிகளில் ஷுப்மன் கில் ஆட்டம்
ஷுப்மன் கில் இதுவரை மூன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், ஒரு போட்டியில் கேகேஆர் அணிக்காகவும், மற்ற இரண்டு போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். 2021, சிஎஸ்கே அணிக்கு எதிராக 51 ரன்கள், கேகேஆர் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. 2022, ராஜஸ்தான் அணிக்கு எதிராக 45 ரன்கள், குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. 2023, சிஎஸ்கே அணிக்கு எதிராக 39 ரன்கள், குஜராத் அணிக்குத் தோல்வி.
ஐபிஎல் பிளேஆஃப் போட்டிகளில் கோலியின் பேட்டிங்கில் இருந்து எதிர்பார்த்த ஆட்டம் இல்லை. ஆனால், தற்போதைய ஆர்சிபி அணி ஒரு வீரரை மட்டும் நம்பி இல்லை. அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். இது ஆர்சிபி அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
55
கில் சதம் அடித்தால் கோப்பையா?
2022-ல் குஜராத் அணி தனது முதல் கோப்பையை வென்றபோது, பிளேஆஃப் போட்டியில் ஷுப்மன் கில் சதம் அடித்திருந்தார். தற்போது, 2-வது குவாலிஃபையர் போட்டியிலும் கில் சதம் அடித்துள்ளார். இதனால், கில் சதம் அடித்தால் அணி கோப்பையை வெல்லும் என்ற சென்டிமென்ட் உள்ளது.