Vaibhav Suryavanshi: 15 வயது வீரரை தூக்கிட்டு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? எதிர்காலத்தை பாழாக்காதீர்கள்! இந்திய அணியை கிழித்து தொங்கவிட்ட ஸ்வான்!

Published : Jul 12, 2026, 08:46 AM IST

Graeme Swann: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 14, 13, 15 ரன்கள் எடுத்த இளம் வீரர் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு, 5, 0, 1 ரன்களில் அவுட்டான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது சரியல்ல என்று இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கூறியுள்ளார்.

PREV
15
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு மறுப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது குறித்து இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் கடுமையாக விமர்சித்துள்ளார். 14, 13, 15 ரன்கள் எடுத்த இளம் வீரரை நீக்கிவிட்டு, 5, 0, 1 ரன்களில் அவுட்டான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது சரியல்ல என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

25
சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான்

இந்திய அணி நிர்வாகம் குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்வான் பேசுகையில்: 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆடிய மூன்று போட்டிகளிலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளான். ஒருவேளை அவன் மூன்று போட்டிகளிலும் முற்றிலும் தோல்வியடைந்திருந்தால், உங்கள் முடிவை புரிந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் யாரைத் திரும்பக் கொண்டு வந்தீர்கள்? 5, 0, 1 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சனை' என்று குறிப்பிட்டார்.

35
நான்கு மாதங்கள் பின்னுக்கு தள்ளிவிடும்

'ஆனால் இந்த பையன் குறைந்தபட்சம் 13, 14, 15 ரன்களாவது எடுத்தான். அவனுக்கு இன்னும் 15 வயதுதான் ஆகிறது. அவன் மனதளவில் இன்னும் வளர்ந்து வருகிறான். இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இந்த முடிவு அவனது கிரிக்கெட் வாழ்க்கையை மூன்று, நான்கு மாதங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும்' என்றும் ஸ்வான் எச்சரித்துள்ளார்.

45
எதிர்காலத்தில் சிறந்த வீரர்

மேலும் கூறுகையில்: எதிர்காலத்தில் ஒரு சிறந்த வீரராக வரக்கூடிய ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் அவரைச் சரியாக வளர்க்க வேண்டும். இப்போது ஒட்டுமொத்த அணியின் மோசமான செயல்பாட்டிற்கு அவன் பலியாகிவிட்டான் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

55
இந்திய அணி நிர்வாகம்

இறுதிப் போட்டியில் அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், 15 வயது வீரரை வெறும் மூன்று போட்டிகளுக்குப் பிறகு நீக்கியது, அணி நிர்வாகத்தின் தேர்வுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, சூர்யவன்ஷிக்கு பதிலாக அணிக்கு திரும்பிய சஞ்சு சாம்சன், இந்தப் போட்டியில் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அவரது இன்னிங்ஸில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories