ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய மேக்ஸ்வெல் - மிட்செல் மார்ஷ்..! இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு

First Published Sep 11, 2020, 9:46 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷின் பொறுப்பான அரைசதத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 294   ரன்களை குவித்து 295 ரன்கள்  என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே மான்செஸ்டரில் நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
undefined
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் ஆகிய இருவரும் களத்திற்கு வந்தனர், டேவிட் வார்னரை 4வது ஓவரிலேயே வீழ்த்தினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். ஆர்ச்சர் 145 கிமீ வேகத்தில் துல்லியமாக வீசிய பந்தில் கிளீன் போல்டாகி 6 ரன்களில் வெளியேறினார் வார்னர்.
undefined
அதன்பின்னர் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சை 16 ரன்களில் வீழ்த்தினார் மார்க் உட்.
undefined
ஸ்மித்துக்கு பயிற்சியில் தலையில் அடிபட்டதால், அவருக்கு பதிலாக 3ம் வரிசையில் இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 6 பவுண்டரிகளுடன் 34 பந்தில் 43 ரன்கள் அடித்து மார்க் உட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
undefined
அதன்பின்னர் லபுஷேன்(21) மற்றும் அலெக்ஸ் கேரி(10) ஆகிய இருவரையும் சொற்ப ரன்களில் வீழ்த்தினார் அடில் ரஷீத்.
undefined
இதையடுத்து 23.4 ஓவரில் 123 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை மேக்ஸ்வெல்லும் மிட்செல் மார்ஷும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்து காத்தனர்.
undefined
மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்த, மிட்செல் மார்ஷ் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். மிட்செல் மார்ஷ் அரைசதம் அடிக்க, அவரைத்தொடர்ந்து மேக்ஸ்வெல்லும் அரைசதம் அடித்தார்,
undefined
அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 59 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து, ஆர்ச்சரின் பந்தில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல்லும் மிட்செல் மார்ஷும் இணைந்து 20 ஓவரில் 126 ரன்களை குவித்தனர்.
undefined
அதன்பின்னர் பாட் கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக, மிட்செல் மார்ஷ் மட்டும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ரன்கள் அடித்தார். 73 ரன்கள் அடித்த மிட்செல் மார்ஷ் 47வது ஓவரில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 294 ரன்களை குவித்து 295 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
undefined
click me!