ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் உண்மையை தெரிஞ்சுக்க உரிமை இருக்கு..! அதனால் நிஜத்தை பேசுங்க.. கவாஸ்கர் அதிரடி

First Published Oct 28, 2020, 3:54 PM IST

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி தேர்வை விமர்சித்துள்ள கவாஸ்கர், ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் உண்மையை தெரிந்துகொள்ள உரிமையிருக்கிறது என்று பிசிசிஐயை விளாசியுள்ளார்.
 

ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 அணிகளும் கடந்த 26ம் தேதி(திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டது. 3 அணிகளிலுமே ரோஹித் சர்மாவின் பெயர் இல்லை.
undefined
நடப்பு ஐபிஎல்லில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், அவர் அடுத்த 2 போட்டிகளில் ஆடவில்லை. இந்நிலையில், அந்த காயத்தை சுட்டிக்காட்டி, அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டு, ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
undefined
ரோஹித் சர்மா காயத்தால் தான் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா உடற்தகுதியுடன் தான் இருக்கிறார் என்பதை பறைசாற்றும் விதமாக, வலையில் அவர் பயிற்சி செய்யும் வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி டுவிட்டரில் பதிவிட்டது. அந்த வீடியோவில், வலைப்பயிற்சியில் ரோஹித் சர்மா பெரிய ஷாட்டுகளை ஆடியிருந்தார்.
undefined
அந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த கவாஸ்கர், ரோஹித் சர்மா இந்திய அணியில் எடுக்கப்படாததற்கு காயம் காரணமல்ல என்பதை தெரிந்துகொண்டு, அவர் நீக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் சொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
undefined
இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய முன்னாள் ஜாம்பவானும் வர்ணனையாளருமான கவாஸ்கர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்குள்ளாக ரோஹித் சர்மா ஏன் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
undefined
ரோஹித் சர்மா வலையில் பயிற்சி செய்கிறார். அப்படியென்றால், அது என்ன மாதிரியான காயம். அணி தேர்வில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உண்மையாகவே ரோஹித் சர்மா ஏன் அணியில் எடுக்கப்படவில்லை? என்ன பிரச்னை? அதை சொல்லியே தீரவேண்டும். உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை ரசிகர்களுக்கு உள்ளது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
undefined
click me!