நட்புக்கு அடையாளமாக விளங்கிய காம்பீர் – ஆட்டநாயகன் விருதை கோலியுடன் பகிர்ந்து கொண்ட தருணம்!

First Published | Sep 17, 2024, 3:34 PM IST

Gautam Gambhir and Virat Kohli: காம்பீர் மற்றும் கோலி இருவரும் இந்திய அணிக்காகவும், ஐபிஎல் தொடரிலும் இணைந்து விளையாடியுள்ளனர். இருவரும் பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளனர். இருப்பினும், 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காம்பீர் தனது ஆட்டநாயகன் விருதை கோலியுடன் பகிர்ந்து கொண்டது இருவரது நட்புக்கு சான்றாகும்.

Gambhir and Kohli

கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஆனால், நாளடைவில் ஐபிஎல் தொடர் மூலமாக இருவரும் எதிரிகள் போன்று ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். ஆனால், காம்பீர் தான் பெற்ற ஆட்டநாயகன் விருதை விராட் கோலியுடன் இணைந்து பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்று உள்ளது. அது என்ன என்று அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க…

Gambhir and Kohli

கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் இந்தியாவிற்காக ஒன்றாக விளையாடிய காலம் உண்டு. அதையும் தாண்டி இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள். கோலி தனது ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கையில் காம்பீர் உடன் இணைந்து விளையாடியிருக்கிறார். அப்போது கோலியை வழிநடத்துவதில் காம்பீர் முக்கிய பங்கு வகித்தார்.

இப்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீரும், இந்திய அணியின் பேட்டிங் ஜாம்பவானாக கோலியும் இணைந்து இந்திய அணியின் வெற்றிக்காக பங்கேற்று வருகின்றனர். ஐபிஎல் தொடரின் போது இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது உண்மை தான்.

2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது முக்கியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது. விராட் கோலி அவுட் ஆன போது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Latest Videos


Gautam Gambhir and Virat Kohli

அப்போது இரு கேப்டன்களும் ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். இதையடுத்து கள நடுவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். இதே போன்று 2023 ஆம் ஆண்டிலும் நடைபெற்றது. அப்போது காம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்தார். ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது கோலி மற்றும் காம்பீர் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதையடுத்து இருவருக்கும் அவர்களது போட்டி சம்பளத்திலிருந்து 100 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் காம்பீர் கொல்கத்தா அணிக்கு வந்ததைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டினர். இருவரும் மைதானத்தில் கை கொடுத்துக் கொண்டு கட்டியணைத்த வீடியோ, போட்டோஸ் எல்லாம் வைரலானது.

நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மென் இன் ப்ளூ ஆரோன் பிஞ்சின் ஆஸிஸிடம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 390 என்ற மகத்தான இலக்கைத் துரத்தியது, வருகை தரும் அணி எப்போதும் 8 பந்துகளுக்கு பின்னால் தங்களைக் கண்டது.

ஆனால், இருவரும் நண்பர்களாக இருந்த காலம் ஒன்று இருந்தது. அதற்கு சிறந்த உதாரணமாக இருந்தது 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தான். இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டியில் காம்பீர் மற்றும் கோலி இருவருமே சதம் விளாசினர். முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் இருவரும் ஏமாற்றம் அளித்தனர். அதன் பிறகு காம்பீர் மற்றும் கோலி இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 3ஆவது விக்கெட்டிற்கு இருவரும் இணைந்து 224 ரன்கள் எடுத்தனர். இந்தப் போட்டியில் கோலி 114 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது விராட் கோலியின் முதல் சதம் ஆகும்.

Gautam Gambhir and Virat Kohli

ஆனால், காம்பீர் 137 பந்துகளில் 14 பவுண்டரி உள்பட 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இறுதியாக இந்தியா 48.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் காம்பீர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து தனது முதல் சதத்தை பதிவு செய்த விராட் கோலியுடன் இணைந்து ஆட்டநாயகன் விருதை காம்பீர் பகிர்ந்து கொண்டார்.

இந்திய அணி கடின இலக்கை துரத்தியதால் அழுத்தம் முழுவதும் அனுபவம் வாய்ந்த காம்பீர் மீது விழுந்தது. ஆனால், கோலி பேட்டிங் செய்த விதம் காம்பீரை அழுத்தத்திலிருந்து காப்பாற்றியது. இதையடுத்து இருவரும் பேட்டிங் பவர்பிளே எடுக்காமலே விளையாடினோம் என்று கோலியை புகழ்ந்து பேசினார் காம்பீர்.

கிரிக்கெட்டின் மதிப்புமிக்க தருணங்களில் இதுவும் ஒன்றாக இப்போதும் நினைவு கூறப்படுகிறது. அதோடு, காம்பீரின் தலைமைத்துவம், அணியின் வெற்றிக்கு இளம் வீரர் கோலியின் பங்களிப்பு ஆகியவற்றையும் எடுத்துக் காட்டுகிறது. என்னதான் இருவருக்கும் இடையில் உரசல் ஏற்பட்டாலும் கூட ஒரு நாடு ஒரு அணி என்று வரும் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருக்கின்றனர்

click me!