IPL : தோனி முதல் ஸ்டார்க் வரை... 10 ஐபிஎல் அணிகள் கழட்டிவிட்ட பிளேயர்கள் யார்... யார்? முழு பட்டியல் இதோ

Published : Nov 17, 2026, 08:36 PM IST

IPL Released Players List : ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், 10 அணிகளும் தாங்கள் விடுவிக்கும் பிளேயர்களின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன.

PREV
14
IPL Released Players List

ஐபிஎல் 2027 தொடருக்காகல் ரிலீஸ் செய்யப்பட்ட பிளேயர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2027-க்கு முன்னதாக எந்த அணி எந்தெந்த வீரர்களை விடுவித்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம். டிசம்பர் 16-ஆம் தேதி ஐபிஎல் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக, நவம்பர் 17 அன்று, 10 அணிகளும் தாங்கள் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அணியிடமும் ஏலத்திற்காக கையிருப்பில் இருக்கும் தொகை குறித்த விவரமும் வெளியாகி உள்ளது.

24
எந்தெந்த அணி யாரையெல்லாம் கழற்றிவிட்டது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மேத்யூ ஷார்ட், மேட் ஹென்றி, ஜாக் போக்ஸ், பிரசாந்த் வீர், அமன் கான், குல்தீப் யாதவ், ஆகாஷ் மாத்வால், டியான் ஃபாரெஸ்டர், மேக்நீல் நரோன்ஹா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோரை விடுவித்துள்ளது. சிஎஸ்கே கைவசம் 28.05 கோடி உள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டிராவிஸ் ஹெட், கமிந்து மெண்டிஸ், ஜெய்தேவ் உனத்கட், மதுஷங்க, ஓம்கார் தமாலே, அமித் குமார், சிவம் மாவி, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் டேவிட் பெய்ன் ஆகியோரை விடுவித்துள்ளது. ஐதராபாத்திடம் 35.15 கோடி உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி லாக்கி பெர்குசன், மிட்ச் ஓவன், நேஹல் வதேரா, அவினாஷ், பிரவீன் துபே மற்றும் விஷால் நிஷாத் ஆகியோரை விடுவித்துள்ளது. பஞ்சாப்பிடம் 18.60 கோடி உள்ளது.

34
அதிக தொகை வைத்திருக்கும் எல்எஸ்ஜி

எல்எஸ்ஜி அணி ப்ரீட்ஸ்கே, அன்ரிச் நார்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே, வனிந்து ஹசரங்கா, நமன் திவாரி, அர்ஷின் குல்கர்னி மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரை விடுவித்துள்ளது. அதிகபட்சமாக லக்னோவிடம் 47.45 கோடி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தீபக் சாஹர், கசன்பர், கேசவ் மகராஜ், முகமது இஸ்ஹார், தனிஷ் மலேவர், மயங்க் மார்கண்டே, மயங்க் ராவத், அதர்வா அங்கோலேகர் மற்றும் டிரென்ட் போல்ட் ஆகியோரை விடுவித்துள்ளது. மும்பை கைவசம் 32.60 கோடி உள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணி நிதிஷ் ராணா, அபிஷேக் போரெல், பதும் நிசங்க, பென் டக்கெட், கருண் நாயர், சாஹில் பரேக், துஷ்மந்த சமீரா, கைல் ஜேமிசன், ரேஹான் அகமது மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை விடுவித்துள்ளது. டெல்லி அணியிடம் 39.50 கோடி உள்ளது.

ஆர்சிபி அணி ஜேக்கப் பெத்தேல், ரிச்சர்ட் க்ளீசன், மங்கேஷ் யாதவ், சாத்விக் தேஸ்வால் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோரை விடுவித்துள்ளது. பெங்களூரு அணியிடம் 14.15 கோடி உள்ளது.

44
கம்மியான தொகை வைத்துள்ள குஜராத்

குஜராத் அணி இஷாந்த் சர்மா, லூக் வுட், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷாருக் கான், கானர் எஸ்தர்ஹுய்சென் ஆகியோரை தக்கவைக்கவில்லை. குறைந்தபட்சமாக குஜராத்திடம் 3.75 கோடி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷிம்ரான் ஹெட்மயர், ஆடம் மில்னே, க்வேனா மபாக்கா, துஷார் தேஷ்பாண்டே, குல்தீப் சென், யுத்வீர் சிங், விக்னேஷ் புத்தூர் மற்றும் ரவி சிங் ஆகியோரை விடுவித்துள்ளது. ராஜஸ்தான் கைவசம் 22.05 கோடி உள்ளது.

கேகேஆர் அணியை பொறுத்தவரை, மதீஷா பத்திரானா, முஸ்தாபிசுர் ரஹ்மான், அஜிங்க்யா ரஹானே, ஆகாஷ் தீப், பிளெசிங் முஸராபானி, தாகேஷ் கம்ரா, உம்ரான் மாலிக், நவ்தீப் சைனி, ராகுல் திரிபாதி, தேஜஸ்வி சிங் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோரை விடுவித்துள்ளது. கொல்கத்தா கைவசம் 41.65 கோடி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories