ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் குவித்த டாப் 5 வீரர்கள் – ரோகித், கோலி, தோனிக்கு எந்த இடம் தெரியுமா?

Published : Oct 15, 2024, 12:43 PM IST

Top 5 Players With Most Sixes in IPL Cricket: ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ் கெயில் முதலிடத்திலும், ரோகித் சர்மா, விராட் கோலி, தோனி, டிவில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

PREV
17
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் குவித்த டாப் 5 வீரர்கள் – ரோகித், கோலி, தோனிக்கு எந்த இடம் தெரியுமா?
IPL 2025, IPL, Top 5 Players With Most Sixes in IPL Cricket

Top 5 Players With Most Sixes in IPL Cricket: ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே அதிரடி சரவெடி, பரபரப்புக்கு பெயர் பெற்றது. பவுண்டரி, சிக்ஸர் மழை பொழியும். ரசிகர்களுக்கு உற்சாகமாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும். பல சாதனைகள் படைக்கப்படும். இன்னும் பல சாதனைகள் முறியடிக்கப்படும். அப்படி படைக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் சாதனைகள் குறித்தும், அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 வீரர்கள் குறித்தும் பார்க்கலாம் வாங்க…

27
Chris Gayle - IPL, Top 5 Players With Most Sixes in IPL Cricket

கிறிஸ் கெயில்:

யுனிவர்சல் பாஸ் என்று சொல்லப்படும் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடரில் 142 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 357 சிக்ஸர்கள் விளாசி அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். கெயில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

37
Rohit Shama - MI, Top 5 Players With Most Sixes in IPL Cricket

ரோகித் சர்மா:

ஹிட்மேன் என்று சொல்லப்படும் இந்திய அணியின் சிக்ஸர் மன்னன் ரோகித் சர்மா 257 போட்டிகளில் விளையாடி 280 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 2023 ஆம் ஆண்டு வரையில் மும்பை இந்தியன்ஸ் அண்யின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார்.

47
Rohit Sharma - MI, Top 5 Players With Most Sixes in IPL Cricket

ஐபிஎல் 2ஆவது சீசனில் டிராபி வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். ஐபிஎல் தொடரில் மட்டும் ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6628 ரன்கள் எடுத்துள்ளார்.

57
Virat Kohli - RCB, Top 5 Players With Most Sixes in IPL Cricket

விராட் கோலி:

ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி 253 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 272 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மேலும், 705 பவுண்டரிகளும் விளாசியுள்ளார். கடந்த 17 சீசன்களாக ஆர்சிபி அணிக்காக மட்டும் விளையாடி வரும் விராட் கோலி மொத்தமாக 8004 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 113 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 8 சிக்ஸர்கள் விளாசினால் ரோகித் சர்மாவின் அதிக சிக்சர்கள் சாதனையை முறியடிப்பார்.

67
MS Dhoni - CSK, Top 5 Players With Most Sixes in IPL Cricket

எம்.எஸ்.தோனி:

கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 252 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும், 24 அரைசதங்கள் உள்பட 5243 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 84* ரன்கள் எடுத்துள்ளார்.

77
AB de Villiers, Top 5 Players With Most Sixes in IPL Cricket

ஏபி டிவிலியர்ஸ்:

மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் டிவிலியர்ஸ் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 251 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். மேலும், 40 அரைசதங்கள், 3 சதங்கள் உள்பட மொத்தமாக 5162 ரன்கள் எடுத்துள்ளார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories