ஐபிஎல்லில் கோலி, ரோகித்தை விட தோனியின் கேப்டன்சி தான் பெஸ்ட் - இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஓபன் டாக்!

First Published | Sep 28, 2024, 8:24 AM IST

ஐபிஎல்‌ தொடரில் விராட் கோலி ஒருமுறையாவது கோப்பையை வெல்லாததால் அவரை தனது அணியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று மைக்கேல் வாகன் கூறியுள்ளார். தோனி, ரோகித் மற்றும் கோலி ஆகியோரில் தோனியையே நான் தேர்வு செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

தோனி, ரோகித் மற்றும் கோலி

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி மட்டுமே இதுவரையில் 17 சீசன்களாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். தோனி, ரோகித் கூட மற்ற அணிகளுக்காக விளையாடியிருக்கின்றனர். ஆர்சிபிக்காக கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால், ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத அணி என்ற மோசமான சாதனையை ஆர்சிபி படைத்திருக்கிறது. ஆதலால், ஆர்சிபியின் நாயகன் என்று சொல்லப்படும் விராட் கோலிக்கு தனது கனவு அணியில் இடமில்லை என்று  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் எம்.எஸ். தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒரே அணிக்காக விளையாடுவது சாத்தியமில்லை. ஆனால், மூவரும் ஒரே அணிக்காக விளையாடினால் அது கனவு நனவானது போல இருக்கும். இந்த மூன்று நட்சத்திர வீரர்களும் இந்த தொடரில் ஆரம்பம் முதலே விளையாடி வருவதால் ரசிகர்களின் அன்பைப் பெற்றுள்ளனர்.

இவர்களில் ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி மட்டுமே இதுவரையில் 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். ஆனால், இந்த இருவருமே இப்போது கேப்டன்கள் கிடையாது.

ஐபிஎல் 2025

ஆனால், இந்த மூவரில் ஒருவரை விடுவிக்க வேண்டும், ஒருவரை விளையாட வைக்க வேண்டும், ஒருவரை பெஞ்சில் உட்கார வைக்க வேண்டும் என்றால் யாரை விளையாட வைப்பீர்கள், யாரை விடுவிப்பீர்கள், யாரை பெஞ்சில் உட்கார வைப்பீர்கள் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த வாகன், எம்.எஸ். தோனியை விட சிறந்த வீரர் யாரும் இல்லை. அவரைத்தான் விளையாட வைப்பேன். 2023 வரை தோனி சிஎஸ்கே கேப்டனாக இருந்தார். ஒருமுறையாவது கோப்பையை வெல்லாத விராட் கோலிக்கு எனது அணியில் இடமில்லை. ரோகித் சர்மா மற்றும் தோனி தலா 5 முறை கேப்டன்களாக இருந்து கோப்பையை வென்றுள்ளனர். இதில் ஐபிஎல் தொடரின் 2ஆவது சீசனில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி டிராபி வென்றது. அதில் ரோகித் சர்மாவின் பங்கு அதிக முக்கியத்துவம் பெற்றது.

Tap to resize

ஐபிஎல் 2025 asta

இதுவரை 264 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி 5243 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி அல்லது ரோகித் சர்மா இருவரில் யாரையாவது நீக்குவீர்களா என்று வாகனிடம் கேட்டபோது, அவர் யோசிக்காமல் விராட் கோலியின் பெயரைச் சொன்னார். தோனிக்கு பதிலாக ரோகித் சர்மா களமிறங்குவார் என்றார். தோனிதான் கேப்டன் என்றும் கூறினார்.

ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங்கைப் பொறுத்தவரை விராட் கோலி சிறந்த வீரராக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆர்சிபி 3 ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குள் நுழைந்து மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. இரண்டாவது சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், ஒருமுறை சிஎஸ்கேவுக்கு எதிராகவும், மற்றொரு முறை ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் தோல்வியடைந்தது. ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி 50 சதவீதத்திற்கும் குறைவான வெற்றி சதவீதத்தையே கொண்டுள்ளது.

தோனி மற்றும் கோலி

அதேபோல் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 55 ஆகும். எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி சதவீதம் 58.22 ஆகும். 2024 ஆம் ஆண்டுக்கு முன் சிஎஸ்கேவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே 14 போட்டிகளில் 7ல் வெற்றி, 7ல் தோல்வியடைந்து பிளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் 5வது இடத்தைப் பிடித்தது. ஆர்சிபி எலிமினேட்டரில் தோல்வியடைந்து வெளியேறியது. 2024 ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனானார்.

ரோகித் மற்றும் கோலி

ஆனால், ஹர்திக் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், 10 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. 2025 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. இன்னும் ஓரிரு மாதங்களில் மெகா ஏலம் தொடங்க உள்ளது. அதற்கு முன் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியை பலப்படுத்திக் கொள்ள கடந்த சீசனில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய வீரர்களை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கோலி மற்றும் ரோகித்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மகேஷ் தீக்ஷனா ஆகியோர் தக்கவைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த சீசன் தோனியின் கடைசி சீசன் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன் சிஎஸ்கே தங்கள் அணியை பலப்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்ட ரோகித் சர்மாவை ஆர்சிபி, லக்னோ மற்றும் டெல்லி அணிகள் வாங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கே.எல். ராகுலை தக்கவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!