#AUSvsIND எந்த மேட்ச்லயுமே ஆடவைக்கலைனா பின்ன அவரு எதுக்கு டீம்ல? இந்திய அணி நிர்வாகத்தை கிழித்த முன்னாள் வீரர்

First Published Dec 2, 2020, 3:55 PM IST

இந்திய அணி நிர்வாகத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் டொட்டா கணேஷ் கடுமையாக விளாசியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி இன்று கான்பெராவில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி தோற்று தொடரை இழந்துவிட்ட நிலையில், அந்த போட்டிகளில் ஆடிராத நடராஜன், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், ஷுப்மன் கில் ஆகிய வீரர்களுக்கு இந்த போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டது.
undefined
ஆனால் அப்போதுகூட, மனீஷ் பாண்டேவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் டொட்டா கணேஷ், மனீஷ் பாண்டே ஓய்வுபெற்ற பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் பென்ச்சில் உட்கார்ந்திருந்த வீரர் யார் என்று பார்த்தால், அந்த சாதனைக்கு மனீஷ் பாண்டே தான் சொந்தக்காரராக இருப்பார்.
undefined
தொடரை இழந்த பின்பு ஆடும் போட்டியில் கூட, வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், பிறகு மனீஷ் பாண்டேவை ஏன் பதினைந்து பேர் கொண்ட அணியில் எடுத்தீர்கள் என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
undefined
2015ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான மனீஷ் பாண்டேவிற்கு தற்போது 31 வயது. இதுவரை இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
undefined
click me!