Divya Deshmukh Win World Women's Chess Championship Title
ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் ஜார்ஜியாவில் நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் நம்பர் ஒன் கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பி, சர்வதேச கிராண்ட் மாஸ்டர் 19 வயதான இளம் இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக் ஆகியோர் முன்னேறினார்கள். இந்நிலையில், இறுதிப்போட்டியில் இவர்கள் இருவரும் பலப்பரீட்சை நடத்தினார்கள். இவரும் மோதிய முதல் சுற்று டிராவில் முடிந்ததால் 2வது சுற்று நடந்தது.
24
திவ்யா தேஷ்முக் சாம்பியன்
இதில் கொனேரு ஹம்பி வெள்ளை நிற காய்களுடனும், திவ்யா தேஷ்முக் கருப்பு நிற காய்களுடனும் விளையாடினார்கள். இருவரும் சாதுர்யமாக காய்களை நகர்த்திய நிலையில் இந்த சுற்றும் டிராவில் முடிந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டிக்கு ஆட்டம் சென்றது. ரேபிட் செஸ் முறையில் நடைபெற்ற இந்த டை-பிரேக்கர் ஆட்டத்தில் திவ்யா தேஷ்முக் 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கொனேரு ஹம்பியை வீழ்த்தினார்
இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்த கொனேரு ஹம்பி வெள்ளி வென்றார். இந்த வெற்றியின் மூலம் FIDE மகளிர் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்ற 4வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை திவ்யா தேஷ்முக் பெற்றார். கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி மற்றும் ஆர். வைஷாலி ஆகியோர் இந்த பட்டத்தை வென்றிருந்தனர். திவ்யா தேஷ்முக்கின் வெற்றியின் மூலம் இந்தியா உலக செஸ் அரங்கில் தொடர்ந்து தனது வலிமையை நிரூபித்து வருகிறது.
34
யார் இந்த திவ்யா தேஷ்முக்
பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார்
டி. குகேஷ், ஆர். பிரக்ஞானந்தா போன்ற இளம் இந்திய வீரர்கள் உலகளவில் செஸ் போட்டிகளில் சாதனை படைத்து வரும் நிலையில், இப்போது திவ்யா தேஷ்முக் மகளிர் பிரிவில் இந்தியாவின் வலிமையை பறைசாற்றியுள்ளார். 19 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கு குடியரசுத் தலைவர் திரெளதி முர்மு வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திவ்யா தேஷ்முக்கின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆகும். செஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இவர் 5 வயதில் இருந்தே விளையாடத் தொடங்கினார். சிறு வயதிலேயே பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை குவித்த இவர் தொடர்ந்து தனது திறமையை வெளிக்காட்டி பல்வேறு பட்டங்களை வென்றுள்ளார்.
செஸ் ஒலிம்பியாட்டில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற திவ்யா தேஷ்முக், ஆசிய சாம்பியன்ஷிப், உலக ஜூனியர் சாம்பியன்ஷிப், மற்றும் உலக யூத் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பல தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். 2021ல் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இவர் 2023ல் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தையும் வென்றார். இதேபோல் 2023ல் ஆசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப், 2024ல் உலக ஜூனியர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.