ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் வெளியேறிய விராட் கோலி?.. வெளியான பரபரப்பு தகவல்!

Published : Oct 24, 2025, 10:17 PM IST

Virat Kohli Australia Exit Rumor: விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக தகவல் பரவி வருகிறது. இதில் உண்மை என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

PREV
14
இந்தியா vs ஆஸ்திரேலிய ஓடிஐ தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும், அடிலெய்டு ஓவலில் நடந்த 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் பறிகொடுத்தது. சுமார் 7 மாதங்களுக்கு பிறகு இந்திய அணியில் களம் கண்ட கிரிக்கெட்டின் கிங் விராட் கோலியின் பேட்டிங்கை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்தனர்.

24
2 போட்டிகளிலும் விராட் கோலி டக் அவுட்

ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் 8 பந்துகளை சந்தித்த விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் கோனோலியின் சூப்பர் கேட்ச்சில் அவுட் ஆனார். இதனால் 2வது போட்டியிலாவது ரன் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதிலும் 4 பந்துகளில் சேவியர் பார்லெட் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி ரன் ஏதும் எடுக்காமல் விராட் கோலி வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்தது.

34
பாதியில் வெளியேறிய கோலி

2வது ஒருநாள் போட்டியில் அவுட் ஆன பிறகு விராட் கோலி கொடுத்த சிக்னல் அவர் இந்த தொடருடன் ஓய்வு பெறப் போவதாக பல்வேறு கருத்துகளை தூண்டியது. இந்த நிலையில், விராட் கோலி லண்டனில் உள்ள தனது மகன் அகேயின் பெற்றோர்-ஆசிரியர் கூட்டத்தில் கலந்து கொள்ள அடிலெய்டை விட்டுச் சென்றதாகவும், 3வது ஒருநாள் போட்டிக்கு முன்பாக அவர் திரும்பி வருவது கேள்விக்குறிதான் எனவும் தகவல் பரவியது.

44
உண்மை என்ன?

இது தொடர்பாக விராட் கோலி ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. ஆனால் இது தொடர்பாக கோலியிடமிருந்தோ அல்லது இந்திய அணி நிர்வாகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை. 

மேலும் போட்டிக்குப் பிந்தைய பத்திரிகையாளர் சந்திப்பின் போதும் கோலி வெளியேறுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆகவே விராட் கோலி ஆஸ்திரேலிய தொடரை விட்டு பாதியில் வெளியேறுவதாக பரவிய தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories