ஆர்சி டெக்னிக்கை பார்த்து சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் – பயிற்சியாளர் பிளெமிங்!

Published : Apr 25, 2025, 05:01 PM ISTUpdated : Apr 25, 2025, 05:03 PM IST

CSK Play Off Chance: கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி எப்படி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதோ அதே போன்று இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்று தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

PREV
19
ஆர்சி டெக்னிக்கை பார்த்து சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் – பயிற்சியாளர் பிளெமிங்!

18வது ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம்

CSK Play Off Chance: 18வது ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர்சிபி அணியின் வெற்றியை முன்னுதாரணமாகக் கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முயற்சிக்கிறது. கடந்த ஆண்டு கடைசி 6 போட்டிகளில் வென்று அதிசயிக்கத்தக்க வகையில் ஐபிஎல்-பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த ஆர்சிபி அணி எங்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். 

29

பிளே-ஆஃப் சுற்று

நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 'மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த ஆண்டு ஆர்சிபி அணி அதைச் செய்து காட்டியது. அதுவே எங்களுக்கு உத்வேகம். பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைய எங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது' என்றார்.

39

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, வெறும் இரண்டு வெற்றிகளும் 6 தோல்விகளும் அடைந்து, 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்னொரு தோல்வி என்பது 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியின் பிளே ஆஃப் கனவைச் சிதைத்துவிடும். ஆனால் மீதமுள்ள 6 போட்டிகளிலும் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிர்ஷ்டமும் கைகொடுத்தால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியும்.

49

இன்று சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் மோதல்: வெற்றி பெற்றால் மட்டுமே பிழைப்பு

புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திலுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள், வெள்ளிக்கிழமை இன்று 'வெற்றி அல்லது வெளியேறு' போட்டியில் மோதுகின்றன. 8 போட்டிகளில் விளையாடி, தலா 6 போட்டிகளில் தோல்வியடைந்த இவ்விரு அணிகளும், பிளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறும் அபாயத்தில் உள்ளன. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணியின் பிளே-ஆஃப் கனவு பெரும்பாலும் சிதைந்துவிடும். 

59

ஹோம் மைதானம் சாதகமில்லை

இந்த முறை பெரும்பாலான அணிகளுக்கு சொந்த மைதான நன்மை கிடைக்கவில்லை. சிஎஸ்கேவும் இதற்கு விதிவிலக்கல்ல. சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணிகளை நிலைகுலையச் செய்த சென்னை அணி, இந்த முறை தரமான சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை. ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி உள்ளிட்ட யாரும் போட்டியை வெற்றி பெறச் செய்யும் வகையில் விளையாடவில்லை.

69

சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களின் பட்டியல் பலம்:

பந்துவீச்சில் கலீல் அகமது, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டும். மொத்தத்தில் தோனியின் படை இன்று சன்ரைசர்ஸ் அணியை வெல்ல வேண்டுமானால், கூட்டு முயற்சியுடன் விளையாட வேண்டும். சன்ரைசர்ஸ் அணியில் உள்ள பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பார்த்தால் யாருக்கும் பயம் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அணி தனது திறமைக்கு ஏற்றவாறு விளையாடுவதை மறந்துவிட்டது.

79

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தொடரில் நீடிக்க வேண்டுமானால் இந்தப் போட்டியில் அசத்தலே வேண்டும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, முன் வரிசை பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கை மறந்தது போல் விளையாடினர். டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோர் ரன்கள் எடுக்கத் திணறுகின்றனர். கடந்த போட்டியில் ஹென்ரிச் கிளாசன் மற்றும் இம்பேக்ட் வீரராகக் களமிறங்கிய அபினவ் மனோகர் தவிர வேறு யாரும் துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை.

89

வெற்றி அல்லது வெளியேறு

பந்துவீச்சுப் பிரிவும் மந்தமாக உள்ளது. கேப்டன் பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட், ஹர்ஷல் படேல் ஆகியோர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. எனவே 'வெற்றி அல்லது வெளியேறு' போட்டியிலாவது ஆரஞ்சு ஆர்மி வெற்றிப் பாதைக்குத் திரும்புமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரில் ஆர்சிபில் விளையாடிய முதல் 9 போட்டிகளில் 2 வெற்றியை மட்டுமே பெற்றிருந்த நிலையில் எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது.

99

சிஎஸ்கே பிளே ஆஃப்

இதில் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி தான் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. அதே போன்ற நிலையில் தான் இப்போது சிஎஸ்கே இருக்கிறது. இதுவரையில் விளையாடிய 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்று 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் சிஎஸ்கே பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories