12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற சிஎஸ்கே; தோனி ஹேப்பி!

Published : May 08, 2025, 12:26 AM IST

KKR vs CSK IPL 2025 Match Results : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 57ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PREV
16
12 போட்டிகளுக்கு பிறகு முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற சிஎஸ்கே; தோனி ஹேப்பி!
கேகேஆரின் பிளேஆஃப் வாய்ப்பு

KKR vs CSK IPL 2025 Match Results : ஐபிஎல் 2025ல் ஏற்கனவே பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாட விரும்புகிறது. அதேபோல், பிளேஆஃப்ஸ் சுற்றுக்குள் நுழைய வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் சிஎஸ்கேவுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடியது.

இது கொல்கத்தா அணிக்கு ரொம்பவே முக்கியமான போட்டி. இந்த முக்கியமான போட்டியில் கேகேஆரின் பிளேஆஃப்ஸ் வாய்ப்பைத் தகர்த்து, எம்எஸ் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இன்னும் 2 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கேகேஆர் பிளேஆஃப் கனவு தகர்ந்தது.

26
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் 57வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் அஜிங்க்யா ரஹானே பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கேகேஆர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. 

36
அஜிங்க்யா ரஹானே 48 ரன்கள்

கேகேஆர் பேட்ஸ்மேன்களில் கேப்டன் அஜிங்க்யா ரஹானே 48 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 38 ரன்கள், மனீஷ் பாண்டே 36 ரன்கள், சுனில் நரைன் 26 ரன்கள் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பந்துவீச்சாளர்களில் நூர் அஹ்மத் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அன்ஷுல் கம்போஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

46
ஊர்வில் படேல் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள்

இந்த தொடரில் ஒரு முறை கூட சிஎஸ்கே 170+ ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது கிடையாது. ஆதலால், இது சிஎஸ்கே அணிக்கு சவாலாகவே இருந்தது. அதன்படிதான் போட்டியும் இருந்தது. சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

ஊர்வில் படேல் 11 பந்துகளில் 4 சிக்ஸர் ஒரு பவுண்டரி உள்பட 31 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா 19 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 8 ரன்களும் எடுத்தனர். ஒரு கட்டத்தி சிஎஸ்கே 5.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

56
டெவால்ட் பிரேவிஸ் 22 பந்துகளில் அரைசதம்

இருப்பினும், டெவால்ட் பிரேவிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஒரே ஓவரில் 30 ரன்கள் குவித்து, மொத்தம் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். அதேபோல், ஷிவம் துபே 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 19 ஓவர்கள் வரையில் சிஎஸ்கே 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் சிஎஸ்கே வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடிக்கவே சிஎஸ்கே வெற்றி உறுதியானது. கடைசியில் அன்ஷுல் கம்போஜ் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது.

66
சிஎஸ்கே முதல் முறையாக 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி

இதன் மூலமாக சிஎஸ்கே கடந்த 12 போட்டிகளில் 170க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோல்வியை தழுவிய நிலையில் முதல் முறையாக கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே 180 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றுள்ளது. கேகேஆர் விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி 6 தோல்வி மற்றும் ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. 5 முறை சாம்பியனான சிஎஸ்கே இப்போதுதான் 3ஆவது வெற்றியை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories