இந்தியா, வங்கதேசம் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் கேப்டன் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கம் முதலே விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.
24
இறுதியில் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அஸ்வின், ஜடேஜா இணை வங்கதேச பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் சதம் விளாசிய நிலையில் 113 ரன்களுக்கும், அவரைத் தொடர்ந்து ஜடேஜா 86 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 376 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
34
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. அந்த அணியில் ஒருவர் கூட அரைசதம் கடக்காத நிலையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் வங்கதேசம் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 32 ரன்களும், ஹசன் மிராஸ் 27 ரன்களும் சேர்த்தனர். மற்ற பெரும்பாலான வீரர்கள் ஒற்றை இலக்க ஸ்கோருடன் நடையை கட்டினர்.
44
இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா 4 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்திய அணி 227 ரன்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து விளையாடி வருகிறது.