இதையடுத்து 94 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 13 ரன்களுக்கும் வில் புகோவ்ஸ்கி 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 35 ரன்களுக்கே ஆஸி., அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும், அதன்பின்னர் மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவருகின்றனர். 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு ஆஸி., அணி 103 ரன்கள் அடித்துள்ளது. லபுஷேன் 47 ரன்களுடனும் ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி., அணியிடம் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில், இப்போதே 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள ஆஸி., அணி வலுவான நிலையில் உள்ளது.