#AUSvsIND 3வது டெஸ்ட்: ரிஷப் பண்ட்டின் மட்டமான விக்கெட் கீப்பிங்..! ஆஸி., அணி சிறப்பான பேட்டிங்

First Published Jan 7, 2021, 2:18 PM IST

3வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி சிறப்பாக பேட்டிங் ஆடிவருகிறது.
 

toss
undefined
இந்திய அணியில் காயமடைந்த உமேஷ் யாதவுக்கு பதிலாக நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா அணியில் இணைவதால் மயன்க் அகர்வால், ஷுப்மன் கில் ஆகிய இருவரில் யார் நீக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மயன்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார்.
undefined
இந்திய அணி:ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, ரஹானே(கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பும்ரா.
undefined
ஆஸி., அணியில் தொடக்க ஜோடி மாற்றப்பட்டுள்ளது. வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி தொடக்க வீரர்களாக இறங்கினர். முதலிரண்டு போட்டிகளில் தொடக்க வீரராக இறங்கிய மேத்யூ வேட் இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
undefined
ஆஸி., அணி:டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், கேமரூன் க்ரீன், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
undefined
டாஸ் வென்ற ஆஸி., அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்களாக வார்னரும் புகோவ்ஸ்கியும் இறங்கினர். வார்னரை ஐந்து ரன்களுக்கே சிராஜ் வீழ்த்திவிட, அதன்பின்னர் புகோவ்ஸ்கியும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அறிமுக போட்டியிலேயே புகோவ்ஸ்கி அரைசதம் அடித்தார்.
undefined
rishabh
undefined
புகோவ்ஸ்கி ஆட்டமிழந்த பின்னர், லபுஷேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். முதல் 2 போட்டிகளிலும் சேர்த்தே 10 ரன்கள் மட்டுமே அடித்த ஸ்மித், இந்த போட்டியில் சிறப்பாக ஆடிவருகிறார். லபுஷேன் 67 ரன்களுடனும் ஸ்மித் 30 ரன்களுடனும் களத்தில் நின்ற நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
undefined
முதல் நாளான இன்றைய ஆட்டத்தில் 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. மழையால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டதால், 35 ஓவர்கள் வீசமுடியவில்லை. முதல் நாள் ஆட்ட முடிவில் 55 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்துள்ளது ஆஸி., அணி.
undefined
click me!