#AUSvsIND அவங்க 2 பேரில் யாரை வேணா எடுங்க..! மறைமுகமா நடராஜன் வேண்டாம்னு சொல்லும் முன்னாள் வீரர்கள்

First Published Jan 5, 2021, 9:00 PM IST

ஆஸி.,க்கு எதிரான 3வது டெஸ்ட்டில் பும்ரா மற்றும் முகமது சிராஜுடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக யார் ஆடுவது என்பது குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்டில் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ஷமி காயமடைந்து தொடரை விட்டு வெளியேறிய நிலையில், 2வது டெஸ்ட்டில் உமேஷ் யாதவ் காயமடைந்து தொடரைவிட்டு விலகினார். ஷமிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவுக்கு மாற்று வீரராக, நெட் பவுலராக எடுக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நடராஜன், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
undefined
எனவே 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருடன் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவதற்கு நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், நடராஜன் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது. இவர்கள் மூவரில் யார் 3வது ஃபாஸ்ட் பவுலராக ஆடுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
undefined
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரக்யான் ஓஜா, மிகத்தெளிவான சாய்ஸ்; பந்தை ஸ்விங் செய்யக்கூடிய ஷர்துல் தாகூரைத்தான் அணியில் எடுக்க வேண்டும். அவரது பலமே பந்தை ஸ்விங் செய்வதுதான். அவரை மாதிரி ஒரு ஸ்விங் பவுலர் அணியில் தேவை. பந்தை நன்றாக வேகமாக வீசக்கூடிய பும்ரா மற்றும் சிராஜ் இருக்கிறார்கள். அவர்களும் பந்தை மூவ் செய்வார்கள் என்றாலும், ஷர்துல் தாகூர் மாதிரியான ஸ்விங் பவுலர் ஒருவர் தேவை. ஸ்விங் பவுலர் என்றால் ஷர்துல் தாகூர். நல்ல வேகமாக வீசுபவர் தேவை என்றால், நவ்தீப் சைனியை எடுக்கலாம். எனவே இந்திய அணியில் எந்தவிதமான வீரர் தேவையென்றாலும் அதற்கேற்ற வீரர்கள் இருக்கிறார்கள் என்றார் ஓஜா.
undefined
ஓஜாவின் கருத்துடன் உடன்பட்ட தீப்தாஸ் குப்தா, ஆம் நான் ஓஜாவுடன் உடன்படுகிறேன். சைனி மற்றும் தாகூர் ஆகிய இருவருமே வித்தியாசமான பவுலர்கள். தாகூர் ஸ்விங் பவுலர்; சைனி ஃபாஸ்ட் பவுலர். ஏற்கனவே பும்ரா, சிராஜ் ஆகிய இருவருமே நல்ல வேகமாக வீசக்கூடியவர்கள். எனவே 3வது பவுலராக தாகூரை எடுக்கலாம் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்தார். சைனி மற்றும் ஷர்துல் தாகூரை பற்றி பேசிய அவர்கள் இருவரும் நடராஜனை பற்றி பேசவில்லை.
undefined
click me!