இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி சூதாட்டம்? அதிர வைக்கும் தகவல்!

Published : Sep 15, 2025, 08:42 PM IST

இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி சூதாட்டம் நடந்துள்ளதாக அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த போட்டியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

PREV
15
Asia Cup India-Pakistan Match Betting

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று துபாயில் நடந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்பு ஆடிய இந்திய அணி 16 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 3 விக்கெட்டுகளை சாய்த்த குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

25
பாகிஸ்தான் வீரர்களை புறக்கணித்த இந்திய அணி

இந்த போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதாவது இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கவோ அல்லது நட்பு பாராட்டவோ இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் நடந்த மோதல் ஆகியவை காரணமாக பாகிஸ்தானுடன் அனைத்து தொடர்பையும் இந்தியா துண்டித்த நிலையில், பாகிஸ்தான் வீரர்களை நமது அணியினர் முற்றிலுமாக புறக்கணித்தனர்.

35
இந்தியா-பாகிஸ்தான் மேட்ச்சில் ரூ.1.5 லட்சம் கோடி சூதாட்டம்?

இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி அளவில் சூதாட்டம் நடந்துள்ளதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் பகீர் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்தியா-பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சூதாட்டம் நடந்துள்ளதாகவும், அதில் ரூ.25,000 கோடி பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன'' என்று தெரிவித்தார்.

45
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.1,000 கோடி

தொடர்ந்து பேசிய சஞ்சய் ராவத், ''இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.1,000 கோடி கிடைத்துள்ளது. இந்தப் பணம் நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். இது மத்திய அரசுக்கோ அல்லது பிசிசிஐக்கோ தெரியாதா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் கட்சியின் மூத்த தலைவர் இந்தியா, பாகிஸ்தான் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக கூறியிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

55
பிசிசிஐயை சாடிய சிவசேனா

ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுவதற்கு சிவசேனா ஏற்கெனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்த போட்டிக்கு எதிராக நேற்று'எனது சிந்தூர், எனது நாடு' என்ற பெயரில் சிவசேனா போராட்டமும் நடத்தி இருந்தது. 'ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட வைத்து பிசிசிஐயும், பாஜகவும் நாட்டு மக்களுக்கும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் துரோகம் செய்துள்ளது. இரத்தமும் கிரிக்கெட்டும் எப்படி ஒன்றாக செல்ல முடியும்?' என்று சிவசேனா கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories