புதனுடன் விநாயகரின் தொடர்பு
இந்து புராணத்தின் படி, விநாயகப் பெருமான் தன் தாயார் பார்வதிக்கு பிறந்தபோது, புதன் பகவானும் கயிலாய மலையில் தான் இருந்தாராம். ஆகவே விநாயகப் பெருமானுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை வழிபாடு செய்ய வேண்டும் என்ற விதிக்கப்பட்டுள்ளது. அப்படி வழிபட்டால் புதன் தோஷங்கள் குறையும். அதுமட்டுமில்லை, ஐயன் சிவன் திரிபுராசுரனை அழிக்காமல் விட்டபோது, தன் தோல்வி குறித்து யோசித்தாராம். சண்டைக்கு முன் விநாயகப் பெருமானை வழிபடாததுதான் அதற்கு காரணம் எனத் தெரிய வந்தது. பின் விநாயகனை வழிபட்டு செய்த போரில் திரிபுராசுரன் தோற்கடிக்கப்பட்டான் என்பது புராண கதை. ஒவ்வொரு வேலைக்கும் முன் விநாயகரை வழிபட்டால், காரியம் தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம்.