எல்லா செடிகளும் நல்லதும், கெட்டதும் கொண்டிருக்கும். ஆனால் ‘நித்திய கல்யாணி’ செடியின் பூ முதல் வேர் வரை எல்லாமே மருத்துவ, ஆன்மிக பலன்களை அள்ளி தரக் கூடியவை. இவை அதிகமாக சுடுகாட்டில் தான் வளரும். இறந்த மனிதனின் கல்லறைகளுக்கு அருகே வளரும் இந்த செடி, உயிருள்ள மனிதனுக்கு குறியீடு. இந்த செடியின் மகத்துவம் தெரிந்தால் அவனுடைய வாழ்நாள் நன்றாக இருந்திருக்கும் என்பதுதான் அதன் அர்த்தமாம். அதனுடைய நன்மைகளை இங்கு காணலாம்.
நித்திய கல்யாணி பூக்களை இறைவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம். நித்திய என்றால் தினமும் என்று பொருள். கல்யாணி என்றால் மங்களத்தை குறிக்கும். ஆகவே நித்திய கல்யாணி என்றால் தினமும் மங்களகரமான காரியங்களை வாய்க்கப் பண்ணும் செடி எனவே கொள்ளலாம். நமது வீட்டில் செல்வத்தை கொடுக்கும் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்ய வைக்க வேண்டுமென்றால் நித்திய கல்யாணி செடியை வளர்க்கலாம். நல்ல யோகம் வரும்.
நித்திய கல்யாணி செடி புற்றுநோயையும், சர்க்கரை நோயையும் கூட கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. இந்த செடி பிறவற்றை போல் இல்லாமல் 12 மாதங்களும் பூத்து குலுங்கும். கிடைத்த இடத்தில் எளிதில் வளரவும் செய்யும். இதை வளர்க்காமல் தவிர்த்தால் நாம் தான் அதிர்ஷ்டத்தை இழந்துவிடுவோம்.
இதையும் படிங்க: கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!
இந்த செடியின் பூக்களை தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். பின் கொஞ்சம் ஆறவிட்டு வடிகட்டி குடிக்கலாம். இந்த சாறு கசப்பு சுவையில் இருந்தாலும் வெறும் வயிற்றில் தினமும் காலையில் குடித்தால் நீரிழிவு கட்டுப்படும் என்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். இதனை நீங்கள் அருந்த விரும்பும்பட்சதில் மருத்துவரிடம் கேட்டு கொள்ளுங்கள்.
இதை சொன்னால் நம்ப முடியாது. ஆனால் நீங்கள் செய்து பலனடைந்தால் நம்புவீர்கள். வீட்டில் வாஸ்து தோஷமே இல்லாமல் இருக்க இந்தச் செடி உதவும். நித்தியகல்யாணி செடிக்கு வாஸ்து தோஷம் சுத்தமாக இல்லை. அவ்வளவு ஏன்? விருச்ச சாஸ்திரத்திலும் கூட நித்திய கல்யாணிக்கு தோஷங்கள் பற்றி சொல்லப்படவில்லை. நித்திய கல்யாணி செடி என்றால் தோஷங்கள் இல்லாதது. வீட்டின் எந்த மூலையிலும் எப்படி வேண்டுமானாலும் இந்த செடியை வளர்க்கலாம். இப்படி வளர்த்தால் வீட்டுக்கு கிடைக்கும் பலன்கள் ஏராளம். இதனை வெறும் சுடுகாட்டு செடி என நினைக்காமல் வீட்டில் அதிர்ஷ்டமும், நல்ல விஷயம் நடக்க இதனை வளருங்கள்.
இதையும் படிங்க: மாசி மகம் எப்போது? மகிழ்ச்சி தரும் அதன் மகத்துவம்.. ஏழு ஜென்ம பாவம் போக்கும் விரதம்..!