கடன் பிரச்சனைகள் தீர உங்க கையால் வாராஹி அம்மனுக்கு இந்த மாலையை போட்டாலே போதும்.. பணவரவு சில நாளில் உயரும்!

First Published | Mar 1, 2023, 10:32 AM IST

Sri Varahi Amman: வராஹி அம்மனை வழிபட்டால் பண பிரச்சனைகள் முழுவதுமாக நீங்கிவிடும். 

நாம் சம்பாதிப்பது நல்ல நிம்மதியான வாழ்க்கைக்கு தான். ஆனால் கடன் அடைக்கவே சிலருக்கு வருமானம் போதவில்லை. எப்படி சம்பாதித்தாலும் வரவை மீறும் செலவு குடும்பத்தலைவனும், தலைவியும் மாதக்கடைசியில் பைத்தியம் பிடித்த மனநிலைக்கே வந்துவிடுவதுண்டு. கடன் பிரச்சனைகள் தான் பல மரணங்களுக்கு காரணமாகி விடுகிறது. அந்த பணக்கஷ்டத்தை முற்றிலும் போக்க சில பரிகாரங்கள் இருக்கிறது. 

வராஹி அம்மன் வழிபாடு

தொழில் நஷ்டம், கடன் தொல்லை, புதிய தொழில் தொடங்க தடை இப்படி பணக்கஷ்டம் தொடர்பான எந்த பிரச்சனையாக இருந்தாலும் வராஹி அம்மனை நாடினால் அவையெல்லாம் மறைந்தே போகும். கடனில் மூழ்கியவர்களை ஆதரவாய் கரம் நீட்டி அணைத்து கொள்வாள் வராஹி அம்மாள். அவளுக்கு உங்கள் கையால் இந்த பரிகாரங்களை செய்தாலே போதும். 

Tap to resize

இரண்டு பரிகாரங்கள்

இந்த பரிகாரத்தை நம் வீட்டு பொருள்களில் செய்துவிடலாம். வீட்டில் வளர்க்கும் புனித துளிசியும், ஏலக்காயும் தான் பரிகார பொருள்கள். இவை இரண்டும் மகாலட்சுமியின் அனுக்கிரகம் உள்ள பொருள்கள். ஒவ்வொரு மாதமும் வரும் பூரம் நட்சத்திரத்தில் தான் வராஹி அம்மனுக்கு ஏலக்காய் மாலையை கட்டி அணிவிக்கவேண்டும். 

வராஹி அம்மனுக்கு பரிகாரம் 

வாரம்தோறும் வரும் சனிக்கிழமை அன்று வாராஹி அம்மனுக்கு இந்த பரிகாரம் செய்யலாம். உங்களுடைய கைகளால் ஏலக்காய் மாலையை கோர்த்து அதனை அம்மனுக்கு போட்டு வணங்கி வர வேண்டும். வீட்டுக்கு பக்கத்தில் வாராகி அம்மனின் கோயில் இருந்தால் அங்கு போய் ஏலக்காய் மாலையை உங்கள் கைகளால் கொடுங்கள். வராஹி அம்மாளை மனதால் நினைத்து 2 மண் அகல் விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்றி வாராவாரம் பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பரிகாரம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி வீட்டில் நிம்மதி நிலைக்கும். ஒரு சில நாள்களில் கடன் பிரச்சனை எல்லாம் சரியாகிவிடும். வாரஹி அம்மன் கோயில் அருகில் இல்லாவிட்டால் வீட்டில் உள்ள வராஹி அம்மன் திருவுருவ படத்திற்கு அல்லது உருவ சிலைக்கு ஏலக்காய் மாலை போட்டு வழிபடலாம். 

லட்சுமிக்கு பரிகாரம் 

இந்த பரிகாரத்தை செய்ய முதலில் குளித்து சுத்தமாக உட்காந்து கொள்ளுங்கள். ஏலக்காய்களை ஒவ்வொன்றாக எடுத்து மஞ்சள் வண்ண நூலில் கோர்த்து அழகான மாலையாக கட்டி முடித்து கொள்ளுங்கள். ஏலக்காய்களுக்கு எண்ணிக்கை இல்லை. உங்கள் விருப்பம் போல கட்டலாம். 11, 21 அல்லது 27 ஏலக்காய் எனும் கணக்கில் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: அஷ்டமி அ‌ன்று வீட்டில் நல்ல காரியம் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.. மீறினால் அஷ்டலட்சுமிகள் அருளை இழப்பீர்கள்!

இதனை வீட்டில் உள்ள வீட்டில் உள்ள மகாலட்சுமி படத்திற்கு அணிவித்துவிடுங்கள். அதன் பின்னர் துளசி இலைகளை கொண்டு மகாலட்சுமியின் பொற்பாதங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள். எப்போதும் பூஜை செய்யும்போது ஏற்றுவது போலவே விளக்கு, ஊதுவத்திகளையும் வைத்தே பூஜை செய்யுங்கள். நீங்கள் அறிந்த ஏதேனும் ஒரு மகாலட்சுமியின் நாமத்தை உச்சரித்து அர்ச்சனை செய்து, கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம். 

ஏலக்காய் மாலையை என்ன செய்ய வேண்டும்? 

நீங்கள் அம்மனுக்கு கட்டி அணிவித்த ஏலக்காய் மாலையை எடுத்து, வீட்டில் உள்ளவஎகள் பிரசாதமாக உண்ணலாம். பக்கத்துவீட்டு குழந்தைகளுக்கும் இந்த ஏலக்காய்களை உண்ணக் கொடுக்கலாம். இல்லையெனில் இந்த ஏலக்காய்களை கொண்டு பாயாசம், கேசரியில் ஆகியவை சமைத்து உண்ணலாம். மகாலட்சுமிக்கு சார்த்திய ஏலக்காய் மாலையை வீணாக்க கூடாது. விரும்பினால் பாலில் கூட இந்த ஏலக்காய்களை போட்டு அருந்தலாம். மாதம்தோறும் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த பரிகாரத்தை மறவாமல் செய்யுங்கள். இந்த பரிகாரம் உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அளிப்பதோடு பணக்கஷ்டத்தை தீர்த்துவைக்கும். 

இதையும் படிங்க: வாஸ்துபடி உங்க வீட்டு வாசல் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை வாசல் இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் நிலைக்கும்

Latest Videos

click me!