வாஸ்துபடி உங்க வீட்டு வாசல் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை வாசல் இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் நிலைக்கும்

First Published | Feb 28, 2023, 7:17 PM IST

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் வைக்க வேண்டும் என தெரிந்து கொள்ளுங்கள். 

வீடு நாம் குடியிருக்கும் அறைகள் மட்டுமல்ல. நமக்கு நிம்மதி கொடுப்பவையும் கூட. அதற்கு சில வாஸ்து சாஸ்திரங்கள் உள்ளன. அதை பின்பற்றினால் தான் வீடு சுபிட்சமாக இருக்கும். சிலர் அழகுகாக்கா விதவிதமான வாசல்களை விடுவர். சிலர் தேவைக்கேற்ப வாசல்களை கட்டிவிடுவர். ஆனால் வாஸ்து சாஸ்திரம் சொல்லும் மூலைகளில் வாசல் விடுவது தான் நல்ல பலன்களை அளிக்கும். அது குறித்து இங்கு காணலாம். 

பொதுவாக வீட்டின் முன்பக்க வாயில், பின்பக்க வாயில் முறையே இரண்டு வாயில்கள் இருக்கலாம். இந்த இருவாயில்களும் வீட்டுக்குள் காற்று புக உதவுகின்றன. இப்படி 2 வாயில்கள் உடைய வீடுகள் வளமையும், வீட்டு உறுப்பினர்களுக்கு ஆரோக்கியமும் தரும். 

Tap to resize

சிலர் வீட்டில் 3 வாசல் வைத்திருப்பார்கள். இங்கு அந்த வாசல்கள் எந்த திசையில் அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த வாசல்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசையில் இருந்தால் நல்ல விஷயம். குறிப்பாக தெற்கு பக்கம் வாசல் இல்லாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. 

ஒருவேளை வாசல் தெற்கில் அமைந்து இருப்பின் வாஸ்து பார்த்து அதனை முறையாக அடைத்துவிடுங்கள். அதில் பழக்கம் வைக்க வேண்டாம். இந்த திசை மட்டுமல்ல, இன்னும் சில திசைகள் கூட வாஸ்துபடி வீடுகளுக்கு உகந்தது அல்ல. 

இதையும் படிங்க: அஷ்டமி அ‌ன்று வீட்டில் நல்ல காரியம் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.. மீறினால் அஷ்டலட்சுமிகள் அருளை இழப்பீர்கள்! 

தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில் வாசல் அமைக்கவே கூடாதாம். ஆனாலும் சிலர் தங்கள் வீடுகளை தெற்கு திசைநோக்கி கட்டி வாசல் வைப்பார்கள். அதனால் ரொம்ப பாதிப்பு ஏற்படாது. வீடுகளுக்கு 2 வாசல் அமைப்பது ஏற்றது. 

இதையும் படிங்க: செவ்வாய் பெயர்ச்சியால் யோகம் பெறும் 4 ராசிகள்.. உலகமே எதிர்த்தாலும் இவங்களுக்கு இனி அதிர்ஷ்ட மழை தான்

Latest Videos

click me!