மூன்று கிரக யோக அமைப்பு ரிஷப ராசியினருக்கு சாதகமானது. ஏனெனில் இந்த ராசியின் கர்ம வீட்டில் இந்த யோகம் உருவாகிறது. இதனால் பணியில் இருப்பவர்களுக்கு பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மேலும் தொழில் ரீதியாக வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களது வீட்டுக் கதவை தட்டும். மறுபுறம், நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் நேரம் இது.