Today Rasipalan 1st Mar 2023: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்..? யாருக்கு கவனம் தேவை..?

Published : Mar 01, 2023, 05:30 AM IST

மார்ச் 1ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 1st Mar 2023: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்..? யாருக்கு கவனம் தேவை..?

மேஷம்: 

இன்றைய தினம் அதிக ஆற்றல் மற்றும் நம்பிக்கையை உணர்வீரர்கள். உங்களது பணித்திறன் மேம்படும். இளைஞர்கள் அவர்களது வேலையை மன அழுத்தமின்றி செய்து முடிப்பார்கள். சோம்பேறித்தனத்தால் சில வேலைகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், சில வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். தொழிலும் மந்தமாக இருக்கும். எனவே நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். திடீரென பிரச்னை வரலாம். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதன் மூலம் அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
 

212

ரிஷபம்:

இன்றைய தினம் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. உங்களது சுயநலத்தால் நெருங்கிய நண்பருடனான உறவில் பாதிப்பு ஏற்படலாம். இன்றைய தினம் சுதாரிப்புடன் செயல்படுங்கள். கவனக்குறைவு பாதிப்பை ஏற்படுத்தும். அவமானங்களை சந்திக்க நேரிடும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். காதல் உறவில் கசப்பு ஏற்படும். நல்ல உணவு மற்றும் ஓய்வு தேவை.
 

312

மிதுனம்:

உங்களிடம் சிறந்த மாற்றத்தை உணர்வீர்கள். உங்களுக்குள் இருக்கும் திறமை மற்றும் அறிவை முழுமையாக பயன்படுத்துங்கள். உங்களது கடின உழைப்பு இப்போது உங்களுக்கு சிறந்த முடிவை தரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் சரியான திட்டமிடலுடன் செயல்பட தொடங்குங்கள். பண வசூலுக்கு இன்று ஏற்ற நாள். சம்பளத்திற்கு வேலை செய்யும் பணியாளர்களும் தங்கள் உழைப்பின் பலனை பெறுவார்கள். குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.  உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதில் கவனம் செலுத்துங்கள்.
 

412

கடகம்:

எதிர்பாராத வரவுகள் இன்று கிடைக்கும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பணி ரீதியாக சிறிய பயணம் செய்ய நேரிடலாம். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும் தினம் இன்று. உங்களது அடத்தால் சில உறவில் விரிசல் ஏற்படலாம். அதனால் அடம்பிடிக்க வேண்டாம். சில தொடர்புகளின் மூலம் தொழிலுக்கான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் நிலவும்.

வாஸ்துபடி உங்க வீட்டு வாசல் எப்படி இருக்க வேண்டும்.. எத்தனை வாசல் இருந்தால் ஆரோக்கியமும், செல்வமும் நிலைக்கும்
 

512

சிம்மம்:

கடின உழைப்பாளிகளுக்கு அதற்கான பலன் கிட்டும். சொத்து தொடர்பான எந்த வேலையாக இருந்தாலும், இன்று அதை செய்ய ஏற்ற தினம். முக்கியமான வேலையில் மறதி ஏற்படலாம். அதனால் கவனமாக இருங்கள். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. சொந்த தொழில் செய்பவராக இருந்தால் ஊழியர்களுடன் சிறு மோதல் ஏற்படலாம். மனைவியுடன் சுமூக உறவு இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
 

612

கன்னி:

உங்களுக்கு அதிர்ஷ்டமான தினம். கடந்த பல ஆண்டுகளாக முடிக்க முடியாமல் இருந்துவந்த வேலைகள் எல்லாம் முடிந்துவிடும். உங்களது சந்தேக குணம் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே நேர்மறையான எண்ணங்களுடன் இருங்கள். திடீரென கிடைக்கும் நண்பரால் பெரிய ஆர்டர் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால் தொழில் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே பரபரப்பாக இயங்குவார்கள்.
 

712

துலாம்:

திட்டமிட்டபடி வேலைகள் நடந்தேறும். உங்களுக்கு இன்றைய தினம் வெற்றிகளை தரும். கவனக்குறைவால் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தவறலாம். அதனால் கவனமாக இருங்கள். மற்றவர்களின் ஆலோசனைகளுக்கு அதிக மதிப்பு கொடுக்காமல் நீங்களே முடிவெடுங்கள். மற்றவரின் ஆலோசனை உங்களுக்கு இழப்பை ஏற்படுத்தலாம். 
 

அஷ்டமி அ‌ன்று வீட்டில் நல்ல காரியம் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.. மீறினால் அஷ்டலட்சுமிகள் அருளை இழப்பீர்கள்! 

812

விருச்சிகம்:

சொத்து ரீதியான எந்தமாதிரியான வேலைக்கும் இன்று மிகச்சிறந்த தினமாக இருக்கும். உங்கள் வாழ்வியல் முறையில் நீங்கள் செய்த மாற்றங்கள், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. பழைய பிரச்னைகளை திரும்ப திரும்ப பேசுவதால் நெருங்கிய உறவில் விரிசல் ஏற்படலாம். பணிநிமித்தமாக முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். அதனால் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை கேட்டுப்பெறுங்கள். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். 
 

912

தனுசு:

வீட்டை புதுப்பிப்பது குறித்து திட்டமிட்டு, அதுதொடர்பான ஆலோசனையை மேற்கொள்வீர்கள். பொருளாதார நிலை மேம்படும். பட்ஜெட் போடாமல் எந்த வேலையையும் செய்யாதீர்கள். உங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்புள்ளது. பணிநிமித்தமாக பரபரப்பாக இருப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்கள், ஊழியர்கள் மீது ஒரு கண் வையுங்கள். அவர்களது கவனக்குறைவு பாதிப்பை ஏற்படுத்தலாம். செரிமான பிரச்னைகள் ஏற்படலாம்.
 

1012

மகரம்:

மற்றவர்களின் வேலைகளில் கவனம் செலுத்தாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்னை இன்று தீரும். ஆதாயமுள்ள பயணம் ஏற்படும். தெரியாத நபர்களுடன் அதிகம் பேசாதீர்கள். தொழில் செய்பவர்களுக்கு இன்றைய தினம் அனுகூலமாக இருக்கும். கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும். சளி, காய்ச்சல் ஏற்படலாம்.
 

1112

கும்பம்:

மதம், கர்மா மற்றும் சமூக சேவை அமைப்புகள் மீது ஆர்வம் செல்லும். அதனால் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். நீண்டகாலமாக மாணவர்களுக்கு இருந்த பிரச்னை முடிவுக்கு வரும். செலவுகள் அதிகமாகலாம். கவனம் தேவை. உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவை.
 

1212

மீனம்:

மூத்தவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அவசரப்படாதீர்கள்; அது உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மீடியா மற்றும் கம்ப்யூட்டர் சார்ந்த தொழில்கள் செய்பவருக்கு லாபம் கிட்டும். ஊதியம் பெறும் பணியாளர்களின் தேவை பூர்த்தியாகும். பணிச்சுமைக்கு மத்தியில் குடும்பத்தினருடனும் நேரம் செலவிடுங்கள். நல்ல ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories