கையில் கட்டுவதால் கிடைக்கும் பலன்!
இந்த கருப்பு கயிறை கையில் கட்டும் பொழுது நமக்கு வீட்டில் பணவரவானது அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த கயிறு நம் கைகளில் இருக்கும் போது நமக்கு வீண் விரயத்தை தடுத்து, பணவரவை அதிகப்படுத்தி தருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தீயசக்தி , கண் திருஷ்டி, வேண்டாதவர்களின் செயல்கள் இவற்றில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளப் பயன்படுகிறது.
காலில் கட்டுவதால் ஏற்படும் பலன்கள் :
இந்த கருப்பு கயிறானது நம் காலில் இருக்கும் போது நம் உடலில் இருக்கும் வியாதிகள் விரைவாக சரியாகும் என்றும், அதிக நாள் நோய் வாய்ப்பட்டவர்கள் அல்லது விபத்து போன்றவற்றை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் இந்த கயிறை காலில் கட்டும் போது மேற்கூரிய தொல்லைகளின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. தவிர கண் திருஷ்டி , தீய சக்தி போன்றவற்றில் இருந்து நம்மை பாதுக்காக்கும் என்பதால் தான் நம் முன்னோர்கள் இந்தப் பழக்கத்தை பின் பற்றி வந்தார்கள்.
கண்திருஷ்டி போக்கி நம்மை காத்துக் கொள்ள :
வீட்டின் கண் திருஷ்டி போக்க இந்த கருப்பு கயிறை வீட்டின் நிலை வாசலில் கட்டி விடலாம். இதனால் வீட்ற்குள் இருக்கும் கெட்ட சக்திகள் ,மேலும் வெளியில் இருந்து மேற்கொண்டு எந்த கெடுதல் தரும் சக்திகளும் நம்மை தாக்காமலும் இந்த கருப்பு கயிறானது நம்மை காக்கும் பயன்படுத்தலாம்.