Today Rasipalan 14th Mar 2023: மேஷ ராசி இளைஞர்களே.. உங்களுக்கு நற்செய்தி.! கடன் வாங்கக்கூடாத ராசிக்காரர் யார்?

மார்ச் 14ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

உங்கள் கனவுகள் நனவாகும் தினம். பிரச்னைகள் முடிவுக்கு வரும். உறவினர்களுடன் நல்லுறவு இருக்கும். இளைஞர்களுக்கு கெரியர் ரீதியான நற்செய்தி கிடைக்கும். சொத்து ரீதியான தொழிலில் நல்ல முடிவுகள் கிடைக்கும். 
 

ரிஷபம்:

செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். ஆவணம் அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன் கவனமாக படிக்கவும். உற்பத்தி தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்கவும். 


மிதுனம்:

சமூக சேவையில் ஈடுபடுவீர்கள். அதிகமாக யோசித்து நல்ல வாய்ப்பை தவறவிடுவீர்கள். சீக்கிரம் முடிவெடுத்து செயல்படுங்கள். கடன் எதுவும் வாங்கவேண்டாம். திடமான முடிவுகள் வெற்றியை கொடுக்கும்.
 

கடகம்:

தேவையில்லாத செலவுகளை குறைத்துக்கொள்ளவும். இன்று முழுவதும் உங்கள் தொழிலில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உயர்பதவிகளில் இருப்பவர்களுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும்.  கணவன் - மனைவி இடையேயான உறவு இனிமையாக இருக்கும். 

சிம்மம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்தவும். பொழுதுபோக்குகளில் அதிக நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காதீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் யாருக்காவது சிறு உடல்நல பாதிப்பு ஏற்படலாம்.

வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..
 

கன்னி:

வெளி வேலைகளில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். மன அமைதி இருக்கும். தொழில் செய்பவர்கள் பணியாட்களின் வேலையை கண்காணிக்கவும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். 
 

துலாம்:

நீண்டகாலமாக வர வேண்டிய பணம் இன்று வந்து சேரும். பட்ஜெட்டை மனதில்வைத்து செலவு செய்யவும். தொழிலில் கூடுதல் சுமை ஏற்படும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
 

விருச்சிகம்:

வரவுக்கு ஏற்ற செலவு ஏற்படும். சிலர் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்திக்கொள்வார்கள். சில காலமாக இருந்துவந்த தடை நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள்.
 

தனுசு:

சொத்து விஷயங்களில் மூத்தவர்களின் அறிவுரையை கேட்டு செயல்படவும். சமூக சேவையில் கவனம் செலுத்தும் அதேவேளையில், உங்கள் சொந்த வேலையிலும் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். 
 

மகரம்:

உங்கள் தனிப்பட்ட விஷயங்களில் வெளிநபர்களை தலையிட அனுமதிக்க வேண்டாம். பொருளாதாரம் சிறந்து விளங்கும். குழந்தைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

கும்பம்:

உங்கள் கடமைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சொத்து பிரச்னை சுமூகமாக முடிவுக்கு வரும். தொழிலில் கவனம் செலுத்தி உங்கள் திறமையை முழுமையாக காட்டுங்கள். பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
 

மீனம்:

தொழிலில் பிரச்னை ஏற்படலாம். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் மற்றும் திருமண உறவில் பரஸ்பரம் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
 

Latest Videos

click me!