வெள்ளி மோதிரம் இந்த விரலில் அணிந்து கொண்டால் போதும்.. உங்களுக்கு புகழும் அதிர்ஷடமும் தேடி வரும்..

First Published | Mar 13, 2023, 3:52 PM IST

வெள்ளி மோதிரத்தை அணியும்போது அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் பலன்கள் கிடைக்கும்.

மோதிரம் அணிவது பலருக்கும் பிடித்த விஷயம். அது கைகளை கவர்ச்சிகரமாக காட்டும் என்பதோடு மட்டுமில்லாமல் அதனால் சில நன்மைகளும் கிடைக்கின்றன. நம் உடலில் இருக்கும் நீரின் அளவை வெள்ளி கட்டுப்படுத்துமாம். சளி, பித்தம், வாத ஆகிய நோய்களை கூட கட்டுக்குள் வைக்க உதவும் என சொல்லப்படுகிறது. 

வெள்ளி மோதிரம் அணிவோருக்கு செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம். வெள்ளி மோதிரம் அணிவதால் உடல், உணர்வுகள், ஆன்மீகம் போன்ற விஷயங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? அது குறித்து முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள இந்த பதிவினை முழுமையாக படிக்கவும். 

Tap to resize

ஜோதிட சாஸ்திரத்தின்படி, வெள்ளி உலோகம் வியாழன், சந்திரன் ஆகிய கிரகங்களுடன் தொடர்புடையது. அது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள நீர் மற்றும் கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்துகிறது. வெள்ளியை அணிவதால் கோபம் தணிந்து மனம் நிம்மதியாக இருக்கும் என நம்பப்படுகிறது. வெள்ளி மோதிரத்தை உங்களுடைய சுண்டு விரலில் அணிந்து கொள்வதால் என்னென்ன அற்புத பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். 

வெள்ளி மோதிரம் அணிவது நல்லது. குறிப்பாக சுண்டு விரலில் வெள்ளி மோதிரம் அணிந்து கொள்வதால் மன அழுத்தம் குறைந்து தெளிந்த சிந்தனைகள் உருவாகிறது. வெள்ளி மோதிரம் அமைதியான மனநிலையை ஊக்குவிப்பதால் திருமண வாழ்க்கை, பணி சூழலில் பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் இருக்கும். வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும். அதுமட்டுமில்லை வெள்ளி அணிவதால் புத்திக்கூர்மை கூட அடையும். படிக்கும் மாணவர்களுக்கு வெள்ளி மோதிரம் நல்லது. 

இந்து சாஸ்திரங்களின் படி வெள்ளி ஒருவர் வாழ்க்கையில் புகழும் அதிர்ஷ்டமும் கொண்டு வரும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றுவதோடு, அழகாகவும் மாற்றும் வல்லமை உண்டு. வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் இருப்பவர்களுக்கு தான் கிடைக்கும். அப்படி ஒருவர் தனக்கு கிடைத்த வெள்ளி சீர்களை தான் வாழும்போது விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாக கொடுக்கக் கூடாது. பிள்ளைகள் ரொம்ப விரும்பினால் புதிதாக வாங்கி கொடுக்கலாம். மற்றபடி, சீராக வந்ததை அவர் காலத்திற்கு பின் தான் பிறருக்கு கிடைக்க செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: உங்க குலதெய்வ கோயிலிலிருந்து இந்த 1 பொருளை கொண்டு வந்தால் போதும்.. கஷ்டங்கள் இருந்த இடம் தெரியாம காணம போகும்

வெள்ளி மோதிரம், நகைகளை அணிந்து கொண்டால் நெகடிவ் எனர்ஜி நீங்கும். வெள்ளி மோதிரம் நோயெதிர்ப்பு மண்டலத்தை கூட வலுப்படுத்த உதவியாக இருக்குமாம். சந்திரனை வலுப்படுத்தும் எல்லையில்லா ஆற்றலை கொண்டுள்ளதால் பலவீனம் குறையும். வெள்ளி மோதிரம் இரத்தின கற்களின் ஆற்றலை கூட்டும். வெள்ளி மோதிரத்துடன் ரூபி சேர்த்து அணிந்து கொண்டால் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் அதிகமாக்கும். ஏனெனில் ரூபி சூரிய கிரத்துடன் தொடர்பு கொண்டது. மேலும் இதயம் குறித்த பிரச்சனைககும் நீங்கும் என நம்பப்படுகிறது. 

இதையும் படிங்க: சென்னையில் திருப்பதி தேவஸ்தானத்தின் 2ஆவது கோயில்.. பிரம்மாண்ட கும்பாபிஷேகம் எப்போது நடக்குது தெரியுமா?

Latest Videos

click me!