சென்னையில் திருப்பதி தேவஸ்தானத்தின் 2ஆவது கோயில்.. பிரம்மாண்ட கும்பாபிஷேகம் எப்போது நடக்குது தெரியுமா?

First Published | Mar 13, 2023, 2:48 PM IST

சென்னையில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கட்டியிருக்கும் பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் மார்ச் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

செல்வங்கள் குவியும் இந்து கோயிலில் ஒன்றான திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோயில் சென்னை தியாகராய நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் சென்னை மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாகும். 

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக பல தடைகளை கடந்து, இப்போது தான் பத்மாவதி தாயார் கோயில் சென்னையில் வசீகரமாக கட்டப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2021ஆம் ஆண்டு பிப்.13ஆம் தேதியில் கோயில் பணிகளை தொடங்கியது. தற்போது தான் முழுமையாக முடித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.10 கோடி செலவாகியுள்ளது.

Tap to resize

இந்தக் கோயிலில் மார்ச் மாதம் 17-ம் தேதி விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மார்ச் 17-ம் தேதி அன்று காலை 7.30 மணிக்கு தொடங்கி 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாம். மக்களே தரிசனம் செய்யாமல் தவறவிடாதீங்க.  

அன்றைய தினம் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பிறகு, காலை 10 மணி முதல் 11 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறும். சுவாமி தரிசனத்துக்கு பொதுமக்களுக்கும் அனுமதி உண்டு. மார்ச் 16, 17 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் தரிசனம் செய்ய வரும் எல்லா பக்தர்களுக்கும் அன்னதானம் கொடுக்கப்படும்.

இதையும் படிங்க: அச்சுறுத்தும் H3N2 வைரஸ் இப்படி தான் பரவுதாம்.. இந்த விஷயங்களை தவறுதலா கூட செய்யாதீங்க.. மீறினால் ஆபத்துதான்

 அதுமட்டுமல்ல.. பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, இலவச தரிசன முறைதான் பின்பற்றப்படவுள்ளது. மார்ச் 17ஆம் தேதி அன்று கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் பங்கேற்கவுள்ளார். 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் 1 'தேங்காய் பூ' சாப்பிடுங்க! இந்த 'பூ'வுக்கு பல நோய்களை விரட்டி அடிக்கும் மகிமை இருக்கு

Latest Videos

click me!