வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

First Published | Mar 13, 2023, 1:13 PM IST

பெண்கள் இந்த 5 முக்கிய விஷயங்களை பின்பற்றி வருவதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பதோடு, வீட்டில் எப்போதும் செல்வ வளம் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
 

பெண் என்பவள் பழங்காலத்தில் இருந்து இன்று வரை ஒரூ நோக்கியும்,முன்னேற்ற பாதையிலும் எடுத்துச் செல்லும் முக்கிய பொறுப்பை கொண்டவள். பொதுவாக பெண்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகள், குழப்பங்கள் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

ஆனாலும், அதனை எல்லாம் கடந்து தனது குடும்பம் மட்டும் தான் தனக்கு எல்லாம் என்று ஒவ்வொரு நொடியும் தன குடும்பத்தை மட்டுமே சிந்தித்து இருப்பவள் பெண் . அப்படியிருக்கையில் மஹாலக்ஷ்மியின் சுயரூபமாக போற்றப்படும் ஒரு பெண் தான் அறியாமல் செய்கின்ற சில தவறுகளால் அவளது குடும்பத்தை கஷ்டம் சூழ்கிறது . அப்படியான தவறுகள் என்னென்ன? எதை பெண்கள் தவிர்க்க வேண்டும்? எதை பெண்கள் பின்பற்ற வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

பெண்கள் இந்த 5 முக்கிய விஷயங்களை பின்பற்றி வருவதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைப்பதோடு, வீட்டில் எப்போதும் செல்வ வளம் இருந்து கொண்டே இருக்கும். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Beware of the danger of too much turmeric..

பெண்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்!

1. பெண்கள் எப்போதும் நறுமணத்துடன் இருத்தல் அவசியமாகிறது . அப்படியெனில் தினமும் வாசனை நிறைந்த மலர்களை (பூக்களை) சூடிக் கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தினமும் பூ வைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. ஆனால் பெண்களின் தலையில் பூ வைத்துக் கொள்வது மங்களகரமான ஒரு விஷயமாகும். ஒரு இனுக்கு பூவையாவது தலையில் வைத்துக் கொண்டு தினமும் விளக்கேற்றி வந்தால் வீடு சுபீக்ஷம் நிறைந்து காணப்படும்.

2. பெண்கள் தினமும் மஞ்சளை பூசிக் குளித்து வந்தால் நமது வீடு சுபீக்ஷம் நிறைந்து ஐஸ்வர்யம் பெருகி காணப்படும்ஐஸ்வர்யத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் தினமும் மஞ்சள் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

கோவிலில் எதிர் திசையில் எங்கே, எப்போது சுற்ற வேண்டும்? யார் யார் சுற்ற வேண்டும்? தெரிந்து கொள்ளுங்கள்!

Tap to resize

3.பெண்கள் வாரத்தில் குறைந்த பட்சம் 1 முறையாவது தலைக்கு தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும். இதை பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும்? தலைக்கு தண்ணீர் ஊற்றிக் குளிப்பது சுத்தம் மட்டுமில்லமல் அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றும் போது அவர்கள் உச்சிப்பகுதியில் உள்ள சக்கரம் விரிவடைகிறது. அந்த சக்கரம் விரிவடையும் போது நல்ல சக்திகள் பெண்களின் உடம்பினுள்ளே நேரடியாக செல்கிறது என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

4. பெண்கள் குளிக்கும் போது பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல், நல்ல விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் ஐஸ்வர்யம் அவர்களுக்கு தானாகவே வந்து அடையும்.

5. பெண்கள் குளிக்கும் போது குறைந்தது ஒரு ஆடை உடுத்தி தான் குளிக்க வேண்டும். ஆடை இல்லமால் குளித்தால் தீய சக்திகள் ஆக்கிரமிக்க வாய்ப்புகள் அதிகமுள்ளது.  

இதனை  பின்பற்றி வந்தால் வாழ்வில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளம் நிறைந்து காணப்படும் என்று சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பிக்கை கொண்டவர்கள் பின்பற்றி வாழ்வில் மேன்மை அடைந்து முன்னேறுங்கள்!

Latest Videos

click me!