மேஷம்:
மன அழுத்தத்தில் இருந்தால் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அன்பு தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். தொழில்நுட்பத்தை கற்று வேலையில் முன்னேறுங்கள்.
ரிஷபம்:
இன்றைய முதலீடு ஆதாயத்தை தரும். உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பரிசு கொடுக்கவோ அல்லது பெறவோ தகுந்த நாள். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள்.
மிதுனம்:
உங்கள் நேர்மறையான சிந்தனைகளுக்கு பலன் கிடைக்கும். நீண்டகால கடனை அடைப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் நீங்கள் செய்த பழைய வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். புரமோஷன் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய அனுபவஸ்தர்களின் அறிவுரையை பெறவும்.
சிம்மம்:
மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மனநலனே உடல்நலனை காக்கும் என்பதை மறக்கவேண்டாம். நேரம் மற்றும் பணத்திற்கு மதிப்பளியுங்கள். கோபப்படாமல் நிதானம் காக்கவும். கூட்டுத்தொழிலுக்கான கையெழுத்து எதுவும் இட வேண்டாம்.
கன்னி:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும். உங்களை சுற்றியிருப்பவர்களுக்கும் நேர்மறையான சூழலை உருவாக்குவீர்கள். உங்களது முக்கியமான பொருள் திருடு போகலாம். அதனால் மன உளைச்சல் ஏற்படலாம். பழைய நண்பரை சந்தித்து, இனிமையான நினைவுகளை அசைபோடுவீர்கள்.
துலாம்:
ரியல் எஸ்டேட் மற்றும் பண பரிமாற்றத்திற்கு ஏற்ற நாள். காதலை பொறுத்தமட்டில் உங்களுக்கு அதிர்ஷ்டமான தினம். அலுவலக நண்பருடன் நீண்டநேரம் வீணாக செலவிடுவீர்கள்.
தனுசு:
தொழிலில் நல்ல லாபமும் முன்னேற்றமும் இருக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கெடுப்பதன் மூலம் சில முக்கியமான நபர்களின் தொடர்பு கிடைக்கும். நீங்கள் செய்ய விரும்பாத செயல்களை மற்றவர்களை செய்யச்சொல்லி வற்புறுத்த வேண்டாம்.
மகரம்:
இன்றைய நாள் பரபரப்பாக இருந்தாலும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தை மீது எரிந்து விழ வேண்டாம். கோபப்படாமல் நிதானமாக இருந்தால் உங்களுக்கு நல்லது. உங்கள் பணியிடத்தில் மற்றவர்களது ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
கும்பம்:
உங்களுக்கு மிக அருமையான நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவால் பொருளாதார உயர்வு கிட்டும். வீட்டு வேலைகளில் குழந்தைகள் உதவுவார்கள். நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மீனம்:
பணியிடத்தில் சீனியர்களின் அழுத்தம் உங்கள் மீது இருக்கும். இன்று நல்ல பணவரவு இருக்கும். ஆனால் வீண் செலவு செய்வதை தவிர்த்து கவனமாக இருக்க வேண்டும். கணவன் - மனைவி இடையே நல்லுறவு இருக்கும்.